குறளின் குரல் – 542

12th Oct 2013

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
                           (குறள் 535: பொச்சாவாமை அதிகாரம்)

Transliteration:
munnuRak kAvA dizhukiyAn thanpizhai
pinnU Rirangi viDum

munnuRak – What was known to be miserable, when it happened in the past
kAvA(du) – not remembering it and not protecting self from it again
izhukiyAn – one who is sloppy because of forgetfulness
thanpizhai – because of that mistake (forgetfulness)
pinnUR(u) – when the same miserable happening befalls
irangiviDum – once again will face, misery, perhaps even more.

Valluvar in the chapter of “Avoding faults” had already said about a similar thought, “varumunnar kAvAdAn vAzhkkai erimunnar vaiththURu pOla keDum”. The same is said again in the context of forgetfulness.

Having seen the ill-effects of a deed earlier, if one forgets that, the same deed will bring even more disastrous misery to them later. Though applicable to every individual, to a ruler or a person of power this is more important as it affects a lot of subjects under such a person.

There is a poem in pazhamozhi nAnUru which has a similar thought. When somebody keeps butter on the head of a peacock and waits for it to melt and impair the vision of peacock to catch it, it would be an impossible task. Likewise, if somebody waits for miserable act to unfold to tackle then it is would prove disastrous. The point here is taking it from other experience and act smartly. Though nothing direct pertinent to forgetfulness here, it could be construed that forgetting to take prior experience could prove miserable.

“Miserable experience of the past without protection, if is forgotten
When the future brings it again, misery will be even more rotten”

தமிழிலே:
முன்னுறக் – முன்பே வந்த பொழுது இஃது துன்பம் பயப்பது என்று அறிந்தவொன்றை
காவா(து) – நினைந்து பார்த்து தன்னை அத்துன்பத்தினின்றும் தன்னக் காத்துக்கொள்ளாது
இழுக்கியான் – மறதியென்னும் சோர்வினால் தவறியவன்
தன்பிழை – மறதியென்னும் அப்பிழையினால்
பின்னூறு – பின்னொருநாள் ஊறு (அதே துன்பமோ, கூடிய அளவிலோ) வரும்போது
இரங்கிவிடும் – மீண்டும் வருந்திவிடும்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுப் போலக் கெடும்” என்று பத்து அதிகாரங்களுக்கு முன்னர் “குற்றம் கடிதல்” அதிகாரத்திலேயே வள்ளுவர் கூறியிருக்கிறார். அதே கருத்தை இங்கே மறதியென்னும் சோர்வின் மேலேற்றிச் சொல்லுகிறார் வள்ளுவர். 

இக்குறள் சொல்வதிதுதான்: முன்பே ஒரு துன்பம் பயக்கும் செயலின் விளைவை கண்டவர்கள், அச்செயலையும், அதன் விளைவையும், அதனால் வந்துற்ற துன்பத்தையும் மறந்துவிட்டவர்கள் பின்னொரு நாளில் அதே செயல்விளைவிக்கும் ஊறினால், பயக்கும் துன்பத்துக்காட்பட்டு மீண்டும் வருந்துவர்.

இக்கருத்துக்கொப்ப பழமொழி நானூறு பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.

முன்னை உடையது காவா திகந்திருந்து,
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல்,-இன்னியற்
பைத்தகன்ற அல்குலாய்!-அஃதாதல் வெண்ணெய்மேல்
வைத்து மயில் கொள்ளுமாறு.

கொக்கின் தலையில் வெண்ணை வைத்து பிடித்தாற்போல என்ற ஒரு சொற்றொடர் வழக்கில் உள்ளது. அதையே மயிலைவைத்து சொல்லும் பழமொழியும் உண்டு. பறவை இங்கு பொருட்டல்ல. அது என்ன கொக்கின் அல்லது மயிலின் தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பது. வெண்ணை வைத்து, அது உருகி, அப்பறவையின் கண்ணை மறைக்கையில் பிடிப்பதுபோலாகும், முன்னர் ஒருவர் உணர்ந்ததை தாம் கைக்கொள்ளாது, பிறகு ஆராய்ந்து காணுவேன் என்பது. இக்கருத்தைக் குறள் தன்மையில் சொல்கிறது.

இன்றெனது குறள்:

வருமுன்னர் தற்காவார் சோர்வால் பிழைத்தார்
வருந்திசெய்யும் பின்னாள் அதற்கு

varumunnar thaRkAvAr sOrvAl pizhaiththAr
varundhiseyyum pinnAL adaRku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment