குறளின் குரல் – 559

29th Oct 2013

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு.
                                     (குறள் 552: கொடுங்கோன்மை அதிகாரம்)

தமிழிலே:
வேலொடு நின்றான் – பயணிக்கும் மக்களை வழிப்பறிக்க கொடிய வேலோடு நிற்கும் கள்வன் 
இடு என்றது போலும் – “உடமைகளை கொடுத்துவிட்டு செல்” என்று மிரட்டிப் பறிப்பதைப் போன்றது
கோலொடு நின்றான் – செங்கோலை ஏந்தி அரசாட்சி செய்யும் ஆள்வோன்
இரவு – மக்களிடம் “கைப்பொருள்” தரும் படி தன் அதிகாரத்தினால் கேட்பது (தராவிட்டால் தண்டனை உறுதி)

ஆறலைக் (ஆறு – வழி, அலை – மக்கள் நடமாடுகை) கள்வர், எனப்படும் வழிப்பறிக் கள்வன் கையில் வேலென்னும் கொலைக்கருவியைக் கொண்டு, வருவோர் போவோரிடம், “கையிருப்புகளைத்” தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்டலைப் போன்றதே, கையில் செங்கோல் ஏந்தி, தன்குடிமக்களிடம் ஏதேனும் ஒரு காரணம்பற்றி வரி என்னும் பெயரில் நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டே போகும் ஆள்வோன் செய்வதும்! 

இருவருமே காக்கும் கருவிகொண்டாலும், மக்கள் தராதிருந்தால் அவர்களை துன்புறுத்தவும் தயங்காத கொடிய உள்ளம் கொண்டவர்கள்; வரிச்சுமை என்னும் பெயரில் ஆள்வோன் செய்வது “கௌரவப் பிச்சை” போன்றதே! இத்தகையோரை, “குடிப்புரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன்” (புற: 75: 4-5) என்று கூர்மை இல்லாத சிறியோனாகச் சொல்கிறது புறநானூற்றுப் பாடலொன்று! இக்குறளின் கருத்து முந்தைய குறளின் கருத்தினுள் அடக்கமேயாயினும், முதற்குறளில் வேந்தனை குடிமக்களின் பொருளுக்காய் வெஃகி, அவர்களை அலைப்பானாகக் கூறியதும், இக்குறளில் இரந்து கொள்வானாகக் கூறியதுமே வேற்றுமை. 

Transliteration:

vEloDu ninRan iDuen RadhupOlum
kOloDu ninRAn iravu

vEloDu ninRan – A highway robber, holding a killing spear in his hand
iDu enRadhu pOlum – like, demanding to handover the belogings, stopping someone on the road
kOloDu ninRAn – Ruler holding the scepter (which is there to protect citizens)
iravu – Asking people to pay more (in terms of taxes etc.) using his power (if people don’t payup, they would be punished)

Highway robbers wielding a spear in their hand, would stop travellers walking alone to harass them to handover all their belongings. Knowing what would happen, if they did not yield, people would have no option but to handover what they have in their possession fearing their lives. Such is the ruler who has the scepter to protect his citizens, but misuses his power to demand more from his citizens slapping them with more tax burden. Citizens that fear punishment to the extent of losing lives would have no option but to pay up, unhappily.

In both cases, the “vEl” and “kOl” are misused from their intendted purpose. puRanAnURu, metaphorically mentions such a ruler as lacking in sharpness of masculinity required of ruler. The meaning of this verse is embedded in the previous itself. In previous verse, he refers to a despotic ruler who gives trouble to his own citizens to embezzele their wealth. Here is the same thing is done in a different way by slapping citizens with more taxes with the misuse of scepter.

“Refusal to the demands of a roadside robber with his spear, would flame
No difference between him and the king, wielding scepter doing the same”

இன்றெனது குறள்:

குடிதன் பொருளிரந்து வேந்துகொளல் கள்வர்
தடிகொண்டு கொள்வது போல்

kuDithan poruLirandu vEndukoLal kaLvar
thaDikoNDu koLvadhu pOl

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment