குறளின் குரல் – 586

25th Nov 2013

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை.
                      (குறள் 579: கண்ணோட்டம் அதிகாரம்)

ஒறுத்தாற்றும் – ஒறுத்து ஆற்றும் – தண்டிக்கத் தக்க அல்லது அழிக்க நினைக்கும்
பண்பினார் கண்ணும் – தன்மை கொண்டவரிடத்தும்
கண்ணோடிப் – கருணைப் பார்வைக் கொண்டு
பொறுத்தாற்றும் – பொறுமையைக் கொண்டு இருக்கும்
பண்பே தலை – தன்மையே சிறப்பாம்

ஒருவரைத் தண்டித்து திருத்த வேண்டியிருந்தாலும் அவரிடத்திலும் அருள் நோக்கினராக இருக்கும் பண்பே சிறப்பு என்று சிலர் உரை செய்தாலும், பிறரை அழிக்க நினைப்பவரிடத்திலும் அருள் நோக்கினராக இருக்கும் பண்பே சிறப்பு என்று வேறு சிலரும் இக்குறளுக்குப் பொருள் செய்துள்ளனர்.

அழிக்க நினைத்தலை பண்பென்று சொல்வது பொருத்தமில்லையானாலும், பரிமேலழகர், அழிப்பதற்கு பயின்றவர் என்று கூறுகிறார். “ஒறுத்து ஆற்றும் பண்பு” என்பதை ஆளுவோரின் “குற்றம் செய்தவர்க்கு நீதி நெறி நின்று தண்டித்து தங்கடன் ஆற்றும் பண்பை” குறிப்பதாகக் கொண்டால், தண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்துக் கண்ணோடுதலைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க என்ப மாதோ” என்று நற்றிணைப் பாடல் கூறுவது இதையே. எங்கு தண்டிக்கவேண்டுமோ அங்கு தண்டிப்பதே அரசின் கடமை. தம்மை அழிப்பவர்க்கும் கருணைக் கண்ணராக இருப்பது பண்பின் உச்சத்தைக் குறிக்கலாம், ஆனால் ஆளுவோர்க்கு சிறப்பாகாது. எவ்வாறு பொருள் கொண்டாலும் குழப்பும் குறளிது. 

Transliteration:

oRuththARRum paNbinAr kaNNum kaNNODi
poRuththARRum paNbE thalai

oRuththARRum – Where the punishment is due or towards those who think of destroying
paNbinAr kaNNum – towards people of such traits
kaNNODi – to have kindly look
poRuththARRum – and be patient
paNbE thalai – such trait is the foremost (for a ruler)

Having a benign look towards someone that needs punishement to be corrected is the foremost trait a ruler must have – is the interpretation by some. Having a benign look even towards those who plan to destroy is an extreme case of being benign, almost bordering inaction on the part of a ruler. This is also another interpretation by some commentators. The use of word “paNbu” does not fit the context in general. Parimelazhagar says the word “paNbu” in the first line denotes the people trained to destroy. 

Regardless of how the interpretation is, this verse seems to preach something that is not right for a ruler to follow. To punish for a crime or a criminal, that does harm to others is the right justice rendered and to say it is elevated attribute of a ruler is going against the rulers’ ethics. At best, this is another confusing verse from vaLLuvar.

“ Having kindly look towards even those who deserve punishment
is the foremost of the traits to have for anyone, as a temperament “

இன்றெனது குறள்(கள்):

தண்டிக்கத் தக்கவர்க்கும் தம்மருள் நோக்கினைக்
கொண்டிருக்கும் பண்பே சிறப்பு

thaNDikkath thakkavarkkum thammaruL nOkkinak
koNDirukkum paNbE siRappu

அழிக்குமெண்ணம் கொண்டார்க்கும் தங்கருணை நோக்கை
விழிதேக்கி ஆற்றல் உயர்வு

azhikkumeNNam koNDArkkum thangkaruNai nOkkai
vizhithEkki ARRal uyarvu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment