குறளின் குரல் – 589

28th Nov 2013

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்லறிதல் வேந்தன் தொழில்.
                                    (குறள் 582: ஒற்றாடல் அதிகாரம்)

எல்லார்க்கும் – யாவருக்கும்
எல்லாம் நிகழ்பவை – நிகழ்பவை யாவையுமே
எஞ்ஞான்றும் – என்றென்றும்
வல்லறிதல் – உடனுக்குடன், விரைவாக (ஒற்றர்கள் மூலமாக) அறிதல்
வேந்தன் – ஆள்கின்றவர்க்கு
தொழில் – முதலாய கடமையாகும்

இக்குறள் ஒற்றறிதலை ஆள்வோர்க்கு தலையாய கடமையாகக் கூறுகிறது. எல்லார்க்கும் என்றதினால் மீண்டும் பகை, நட்பு, சார்பில்லா நிலையாளர் ஆகிய மூவரையும் குறிக்கிறது. இம்மூவரை கம்பர் அரசியல் படலத்தில் “ஏவரும் இனிய நண்பர் அயலவர், விரவார் என்று மூவகை இயலோர் யாவர்” என்ற வரிகளில் குறிக்கிறார். அவர்கள் வழியாக நடப்பவை யாவற்றையும், என்றென்றும், விரைந்து அறிதலே ஆள்வோர்க்கு தலையாய கடனாகும் என்கிறது இக்குறள்.

Transliteration:

ellArkkum ellAm nigazhbavai enjAnRum
vallaRidal vEndan thozhil

ellArkkum – For everyone
ellAm nigazhbavai – whatever happens in their lives or because of them
enjAnRum – always
vallaRidal – knowing them swiftly
vEndan – rulers’
thozhil – duty

This verse says that the espionage operations is an imperative to rulers. The word “ellArum” means friendly, enemy and neutral states for a ruler. Knowing whatever happens in their lives, or because of them, always, and swiftly knowing to design and execute countering operation is an important part of a ruler’s job.

“For everyone, always, and whatever happens by or because of them,
For a ruler, it is imperative to act swiftly, using spies, to avoid mayhem

இன்றெனது குறள்
யார்க்கும் நிகழ்வ தெவையுமே என்றென்றும்
கூர்த்தொற்றல் ஆள்வோர் கடன் 

(கூர்த்த – கூர்மையாக, மதி நுட்பத்தோடு)

yArkkum nigazhva devaiyumE enRenRum
kUrthoRRal AlvOr kaDan.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment