குறளின் குரல் – 617

26th Dec 2013

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 
தாஅய தெல்லாம் ஒருங்கு. 
                            (குறள் 610: மடியின்மை அதிகாரம்)

மடியிலா – சோம்பலில்லாத, மெத்தனமில்லாத
மன்னவன் – ஆள்வோன்
எய்தும் – அடைவான்
அடியளந்தான் – மூவுலகையும் (விண், மண், பாதாளம்) தனது மூன்று அடிகளில் அளந்தவன்
தாஅய(து) எல்லாம் – அடைந்த அந்த அளவுச் செல்வம் (புகழ்) அத்துணையும் (தாய – தாவி அளந்த)
ஒருங்கு – ஒட்டுமொத்தமாக.

சோம்பலில்லாத ஆள்வோன், மூவுலகையும் தன் மூன்று அடிகளால் அளந்த வாமனன், மாயவன் அளந்து பெற்றது அத்துணையும் தன்னுடைய சோம்பலின்மையினால் அடைவான் என்கிறது இக்குறள். சோம்பலின்மை இன்றேல் ஊக்கமுடைமை தானாக அமையும், அதனால் உலகையே வெல்லலாம் என்பதை உணர்த்துவதே இக்குறள். ஏற்கனவே ஊக்கமுடைமை அதிகாரத்தில், மற்றொரு அதிகாரத்தில் வருவதாக, பின்வரும் வரிகளைப் பார்த்திருக்கிறோம். “மடியிலான் தாளுளாள் தாமரையினாள்” என்ற வரிகளால், சோம்பலில்லாதவன் காலடியில் திருமகளும் காத்திருப்பாள் என்பார் வள்ளுவர். 

சம்பந்தர் தூங்கானை மாடத் தேவாரப்பாடலில், “மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான்” என்று சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாகி பரவி நின்றதைக் கூறுகையில், “தாய” என்கிறார். “தாய” என்ற சொல், கலித்தொகையிலும், “ஞால மூன்றடித் தாய முதல்வற்கு (கலித். 124)”, “அளந்த” என்ற பொருளில் வருகிறது. 

Transliteration:

maDiyilA mannavan eidum aDiyaLandAn
tAaya dellAm orungu

maDiyilA – Not being slothful, slowy, sluggish
mannavan – the ruler
eidum – will attain
aDiyaLandAn – One who measured all three worlds with three steps (vAmanA)
tAayadu ellAm – all that he measured
orungu – together

Lord Vishnu in his vAmanA avatAra measured the all three worlds (heavens, earth and the, world under) scaling with his three steps, just by feet. Such feat is possible for a ruler that works without sloth, says this verse. Without being slothful, will be zeal to accomplish; and with that zeal one can conquer the world is the thought conveyed in this verse. 

Already we have seen as a reference in the chapter of zeal about how even the goddess of wealth, consort of Lord Vishnu, the one who sits on Lotus, will always serve the ruler with zeal. “mAdiyilAn thALuLALthAmaraiyinAL”.

There are references in Sambandar thEvAram and Kalithogai for the word use of “thAya” to imply measuring. (“maNNum viNNum thAya aDi aLandAn” – Sambandar, “njAla mUnRaDith tAya muthalvaRku” – kaliththogai).

All the gains of Lord that measured all worlds with his feet,
the ruler without slothfulness will attain together as a feat!

இன்றெனது குறள்

உலகளந்தான் பெற்றதை ஆள்வோர் பெறுவார்
உலப்பாம் மடிமை கெடின்

(உலப்பு – குறை, அழிவு)

ulagaLandAn pERRadai AlvoR peRuvAr
ulappAm maDimai keDin

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment