குறளின் குரல் – 662

10th Feb 2014

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை.
                                 (குறள் 656: வினைத்தூய்மை அதிகாரம்)

ஈன்றாள் – தன்னை பெற்றவள்
பசி – பசியால் வருந்தக்
காண்பான் ஆயினுஞ் – ஒருவன் கண்டாலும்
செய்யற்க – செய்யக்கூடாது (யாவற்றை ?)
சான்றோர் – கற்றறிந்த பெரியோர்
பழிக்கும் – தூற்றுகின்ற தன்மையதாகிய 
வினை – செயல்களை

அறநூல்கள் முதியோராகிய தாய் தந்தையர், கற்புடை மனைவி, மற்றும் குழந்தைகளுக்கள் பசியால் வருந்துகையில் நெறியல்லாதன செய்தாகிலும் அவர்களைக் காப்பாற்றுதல் தலைமகற்கு கடன் என்கின்றன. ஆனால் ஆட்சியதிகாரத்தில் இருப்போருக்கு குடிகளின் நலம் ஒன்றே குறியாக இருக்கவேண்டும் ஆதலின், சான்றோர் பழிப்பதாகிய செயல்களை செய்யாது ஒழியவேண்டும். 

அதுகாரணம் பற்றியே, இக்குறளில் தாய் பசியால் வருந்தக்கண்டும், சான்றோராகிய பெரியோர் பழிப்பதை செய்யாத தூய வினையாளனாக ஆட்சியாளர் இருக்கவேண்டும், என்று கூறுகிறார் வள்ளுவர்.

Transliteration:

InRAL pasikANbAn Ayinum seyyaRka
sAnROr pazhikkum vinai

InRAL – mothers
Pasi – unbearable hunger
kANbAn Ayinum – even if seen that
seyyaRka – never do (to quench that)
sAnROr – wisemen
pazhikkum –what they find despicable 
vinai – deeds

The books on ethics advocate indulging in what are considered shameful deeds, as a duty of a man, for the sake of quenching the dreadful hunger of old aged parents, chaste wife and the young children. But such exceptions are not applicable to a ruler, as his obligations are for larger subjects and nation and his example is an important one for the subjects to follow.

Hence, in this verse, VaLLuvar says, even if his mother reels in extreme hunger, a person shall not do what is deemed shameful by the wisemen.

“Never indulge in what wisemen consider despicable
even if it is for saving a mother’s hunger, as justifiable”

இன்றெனது குறள்:

பெரியோர் பழிப்பதை தாய்ப்பசி தீர்க்க
சரியென்று செய்தல் தவறு

periyOr pazhippadai thAippasi thIrkka
sariyenRu seydal thavaRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment