குறளின் குரல் – 681

1st Mar 2014

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 
இருள்தீர எண்ணிச் செயல்.
                                 (குறள் 675: வினைசெயல்வகை அதிகாரம்)

பொருள் – வினையாற்றலுக்கு தேவையான பொருள்
கருவி – செய்யும் கருவி
காலம் – செய்யத்தக்க நேரம்
வினை – செய்யும் செயல்
இடனொடு – செய்யும் இடம்
ஐந்தும் – ஆகிய ஐந்தையும்
இருள்தீர – மயக்கம் நீங்கும்படியாக
எண்ணிச் – ஆராய்ந்து
செயல் – செய்க.

செய்யும் வினை, அதைச் செய்வதற்கு ஏற்ற கருவிகள், செய்வதற்குரிய நேரம், செய்வதற்குத் தேவையான பொருள், செய்யத்தக்க இடம் ஆகிய ஐந்தினையும் நன்கு அறிந்து உணர்ந்து, இதில் எதுகாரணம் பற்றியும் குழம்பாது, மயங்காது, சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

இக்கருத்தோடு இயைந்து கம்பரும் தனது கம்பராமாயண மந்திரப்படலப் பாடலில், “காலமும் இடனும், ஏற்ற கருவியும் தெரியக் கற்ற நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்” என்பார். எளிய குறள், வலிய பொருள்.

Transliteration:

poruLkaruvi kAlam vinaiyiDanoDu aindhum
iruLthIra eNNich cheyal

poruL – The money that is needed to do some task
karuvi – the tools that are required
kAlam – the appropriate time to do
vinaiy – the task to be done
iDanoDu – the place where the task is done
aindhum – these five
iruLthIra – devoid of any doubts and vacillations
eNNich – think through
cheyal – and do things.

A person (especially ministers) must keep in his mind, the following five aspects before doing a task; they are: the nature of task undertaken, the tools that are required to do, the appropriate time to do, the amount of money needed to the same, and the appropriate place to do it. Once decided on these five, the execution must be without confusion or vascillation.

“Five aspects, of a task such as the nature of task, tools, time, money and the location
must be thought through, and the execution must be without vacillation or confusion”

இன்றெனது குறள்(கள்):

வினையொடு நேரமிடம் செல்வம் கருவி
நினைந்தைந்தும் செய்க வினை

vinaiyoDu nEramiDam selvam karuvi
ninaindeNNi seiga seyal

வினைகருவி நேரமிடம் செல்வமென ஐந்தும்
நினைந்துமயங் காதுசெய்தல் நன்று

vinaikaruvi nEramiDam selvamena aindhum
ninaindumayang kAduseidal nanRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment