குறளின் குரல் – 706

26th Mar 2014

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
                                (குறள் 700: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

பழையம் – ஆள்வோர் எமக்கு பழக்கமானவரே
எனக்கருதிப் – என்று எண்ணி
பண்பல்ல செய்யும் – பண்புக்கு ஒவ்வாதன செய்கின்ற
கெழுதகைமை – தகாத விதத்தில் எடுத்துக் கொள்ளப்படும் உரிமை
கேடு தரும் – ஒருவருக்கு கேட்டினையே தரும்

ஆள்வோன் எமக்கு மிகவும் பழக்கமானவரே என்று தகாதவிதத்தில் கொள்ளும் உரிமையினால் பண்பிலாதவற்றைச் செய்வதானது ஒருவருக்கு கேட்டினையே தரும் என்று சென்ற குறளின் தொடர்ச்சியாக கூறி அதிகாரத்தை நிறைவு செய்கிறார். இக்குறளின் கருத்தையொட்டிய கம்பராமாயணப் பாடல் (சுந்தர காண்டம், ஊர்த் தேடு படலம்) இதோ கூறுகிறது.

‘விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?’என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, ‘ஏகு’ என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-
‘பழையம் யாம்’ என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்?

இது கம்பனின் கற்பனை நயத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. மண்டோதரி அரண்மனையில் அனுமன் சீதையை தேடுகையில், அங்கு வீசும் தென்றலைப்பற்றி வர்ணனையாக, “தம் வேலையால் தமக்கு வரும் பயனை ஆராய்ந்து அறிந்த அறிவாளிகள், நாம் நெடுநாள் பழக்கம் உடையேம் என்று பண்புக்குப் பொருந்தாதவற்றைச் செய்வார்களோ?. அதே போலே பெருமை மிக்கத் தென்றல் காற்று, தூங்கும் மங்கையரின் தோழியர் அழைக்கச் சென்று, கட்டளை யாது? என்று கேட்டு அதற்கேற்ப மீள்வதாகி, ஒரு ஊஞ்சல் போல வருவதும் போவதுமாக இருக்கிறது” என்கிறார் கம்பர்.

Transliteration:

Pazhaiyam enakkarudhip paNballa seyyum
Kezhuthagaimai kEDu tharum

Pazhaiyam – the ruler Is known to me
enakkarudhip – thinking so
paNballa seyyum – what is incongruent to ethics
Kezhuthagaimai – rights taken unduly
kEDu tharum – will only give disastrous outcome

Thinking that the ruler is very well known to me, a person that works closely with person of authority, shall not do anything incongruent to ethics required for such privilege, as such behavior will only bring forth disastrous consequences to them. This verse is a natural progression to the previous verse.

In Kamba Ramayanam, Kambar uses his imaginative spree to emphasize the same thought, by showing how glorious breeze will not take its familiarity with the beautiful ladies of Mandodari’s house for granted, but will seek the permission of maiden ladies to come and go.

“Knowing the ruler for a longtime shall not veer a person
from eithical conduct, as it will bring disaster of aversion”

இன்றெனது குறள்:

நெடுநாள் பழக்கமென்று பண்பற்றுச் செய்யின்
கெடுதல் கொடுத்திடும் கேடு

neDunAL pazhakkamenRu paNbaRRuch seyyin
keDudal koDuththiDum kEDu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment