குறளின் குரல் – 715

4th Apr 2014

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் 
வகைமை உணர்வார்ப் பெறின்.
                            (குறள் 709: குறிப்பறிதல்அதிகாரம்)

பகைமையும் – ஒருவர் தமக்குப் பகையா
கேண்மையும் – அல்லது நட்பா என்பதை
கண்ணுரைக்கும் – அவருடைய கண்களே கூறிவிடும்
கண்ணின் வகைமை – பார்வையின் வேறுபாடுகளைக் கொண்டு
உணர்வார்ப் பெறின் – ஒருவர் அகத்துளதை உணர்ந்து கொள்வார்க்கு

இக்குறளும், பார்வையின் வேறுபாடுகளை கண்ணைக் கண்டு சொல்பவர்களுக்கு, கண் என்னும் கருவியே ஒருவர் உள்ளத்தினை தெள்ளத்தெளிவாகாக் காட்டும் கருவியாம் என்கிறது. ஒருவர் நண்பரா, அல்லது பகைவரா என்பதை அவருடைய கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நாலடியார் பாடலொன்று இவ்வாறு செல்கிறது.

ஆற்றும் துணையும் , அறிவினை உள்அடக்கி 
ஊற்றம் உரையார் உணர்வு உடையார், ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

இப்பாடலின் கருத்து இக்குறளின் கருத்தினை ஒட்டி வருவது. பேரறிவு கொண்டோர் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை அச்செயலை செய்து முடிக்கும் வழிமுறைகளை வெளிப்படுத்தார். எவருக்கும் தெரியாத வகையில் உள்ளத்தே வைத்து செயல் முடிப்பார். மேலும், பிறர் கொண்ட முயற்சிகளை அவரவருடைய முகம், கண் ஆகியவற்றின் அசைவுகளால் , ஆராய்ந்து அறியவல்ல நல்லறிவு உடையாரது குறிப்புக்குப் பணிந்து நடப்போர் உலகத்தவர். 

Transliteration:

Pagaimaiyum kENmaiyum kaNNuraikkum kaNNin
Vagaimai uNarvArp peRin

Pagaimaiyum – if someone is an enemy
kENmaiyum – or a friend
kaNNuraikkum – will be revealed by his eyes;
kaNNin Vagaimai – by how someone’s eyes reflect different thoughts 
uNarvArp peRin – to a person who is able to understand others mind

This verse also says that those who can understand what is reflected in someboyd’s eyes, can read their mind through, as those eyes will reveal if that person is a friend or foe. A persons’ eyes can not hide, what is in their mind; A scheming, genuinely friendly or even bitterly unfriendly hearts, minds will be revealed by the eyes,

“Eyes reveal someone’s friendship or enemity in their heart,
that too for someone astute that is able to understand that”

இன்றெனது குறள்:

பார்வையே சொல்லும் பகைமையும் நட்பையும்
பார்வை வகையறி வார்க்கு

pArvaiyE sollum pagaimaiyum natpAiyum
pArvai vagaiyaRi vArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment