குறளின் குரல் – 729

18th Apr 2014

பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 
அவையகத்து அஞ்சா தவர்.
                             (குறள் 723: அவை அஞ்சாமை அதிகாரம்)

பகையகத்துச் – பகைவரிடத்தில் பொருது
சாவார் – சாவதற்கு
எளியர் – எளிதென்றிருப்பர் பலர்
அரியர் – ஆனால் சிலரே
அவையகத்து – கற்றோர் நிறைந்த அவையினை நோக்கி
அஞ்சாதவர் – பேசுதலுக்கு அஞ்சாதவர்

பகைவர் இருக்கும் இடங்களில் நுழைந்து அவரோடு பொருது மடிந்து போதல் எளிதான செயலாம் பலருக்கும். ஆனால் கற்றோர் நிறைந்த அவையிலே அஞ்சாது தமது கருத்தை இயம்பும் திறமுடையோர் ஒரு சிலரே. அத்தகையோரைக் காணல் அரிதேயாம். வாட்போருக்கு வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்கூட கற்றமைந்தார் அவையில் வாய்போருக்கு வாய்ப்பு வந்தாலும் விலகிவிடுவதை இக்குறள் கூறுகிறது.

Transliteration:

Pagaiyagaththuch chAvAr eLiyar ariyar
Avaiyagaththu anjA dhavar

Pagaiyagaththuch – Fighthing with enemies
chAvAr – and to die
eLiyar – is easy for many
ariyar – only a few
Avaiyagaththu – in the assembly (of scholarly)
anjAdhavar – are fearless (to speak what is in their mind)

For many, to fight an enemy, entering the their turf and even die for a cause or none is easy. But, to speak in the house of scholarly is really hard and only a very few gifted scholars can face it tough. To see such people is rare. Sword fight is easier than the “word-fight” for many; especially facing an assembly of scholars is indeed difficult for most people, and most would avoid such situations.

“To fight an enemy is easy for many, in their own turf;
Only a few can face the house of erudite real tough”

இன்றெனது குறள்:

பகைபொருது சாகவுண்டு பல்லோர் சிலர்க்கே
தகைவற் றவையஞ்சா வாக்கு

pagaiporudhu sAgavunDu pallOr silarkkE
thagaivaR RavaiyanjA vAkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

1 Response to குறளின் குரல் – 729

  1. பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை
    Source: https://agarathi.com/word/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88

    பல உரைகள் போர்க்களத்தில் பகைவரிடம் சாக துணிந்த எளியோர்கள் பலர் ஆனால் அறிஞர்கள் பலர் கூடியுள்ள இடத்தில அஞ்சாமல் பேசுபவர்கள் சிலரே என்ற பொருளில் கூறப்பட்டு இருக்கிறது. எனக்கு சற்று வேறுமாதிரியாக தோன்றுகிறது. ஏனெனில் போர்க்களத்தை சந்திக்கவும் ஒரு துணிவு வேண்டும். போர் வீரர்களை எளியோர் என்று கூறவேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு அவையில் மாற்று கருத்து உள்ளவர்களை உள்ளே மனதில் (அகத்தே) அஞ்சி இறந்ததுகொண்டே இருப்பார்கள். தான் கொண்ட கருத்தை அவையில் கூறமாட்டார்கள் அல்லது மாற்று கருத்து வரக்கூடிய கருத்துக்களை விடுத்து மற்ற கருத்துக்களை மட்டும் கூறுவார்கள். இத்தகையவர்கள் பலவீனமான எளியவர்கள் பலர்.

    ஆனால் அறிஞர்கள் பலர் கூடியிருக்கும் அவையில் மாற்றுக்கருத்து வரக்கூடிய கருத்துக்களை சற்றும் அஞ்சாமல் கூறுபவர் வலிமையானவர், அறிவு கூர்மையானவர், அரிதானவர். அத்தகையவர் மாற்றுக்கருத்துக்களுக்கு ஆயுத்தமானவர். தர்க்கத்துக்கு தயாரானவர்.

Leave a comment