குறளின் குரல் – 735

24th Apr 2014

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் 
நல்லா ரவையஞ்சு வார்.
                        (குறள் 729: அவை அஞ்சாமை அதிகாரம்)

கல்லாதவரின் – படிக்காத மூடர்களை விட
கடையென்ப – கீழானவாராம்
கற்றறிந்தும் – பல நூல்களைக் கற்றறிந்தவராயினும்
நல்லார் அவை – சான்றோர்கள் நிறைந்த அவையில் பேசுவதற்கு
அஞ்சுவார் – பயப்படுகிறவர்.

பல நூல்களை கற்றறிந்தவராயினும், சான்றோர் நிறைந்த அவைகளிலே தம் கருத்துக்களை அஞ்சாமல் பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் படிப்பறிவில்லாத மூடர்களைவிட மிகவும் கீழானவரே.

கற்றிருந்தும் கற்றோர் அவையில் பேசுதற்கு அஞ்சுபவரை கோழைகளென்றும், அவர்களின் அறிவு வீரமில்லா பேடியின் கை வாளென்றும் கூறி, பின்னர் அவர்கள் கற்ற கல்வியால் பயன் யாதென்று வினவி, இக்குறளில் அவர்கள் கல்லாத மூடரைவிட கீழானவர் என்று சொல்லி அவைக்கஞ்சாமையை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

Transliteration:

kallA davarin kaDaiyenba kaRRaRindhum
nallA ravaiyanju vAr

kallAdavarin – worse than the uneducated fools
kaDaiyenba – lowly are people,
kaRRaRindhum – though of high erudition
nallAr avai – in the assembly of scholars
anjuvAr – fearful of speaking

Though of high erudition, those who are fearful of speaking in any assembly of scholars are worse and lowly than the uneducated fools, says this verse.

Progressively, calling such educated, but fearful lot as cowards, hermaphrodites with wielding weapons and then asking them what use is it of their erudition, finally, calling them worse than uneducated fools, vaLLuvar is perhaps kinding their pride and trying to emphasize the need to be unfearful.

“Lowly and worse than illiterate fools are the educated
but fearful of assembly of scholars to speak uninhibited”

இன்றெனது குறள்:

கற்றாலும் மூடரிலும் கீழென்பர் அஞ்சியஞ்சி
முற்றவையில் மூடுவாயி னர்

kaRRalum mUDarilum kIzhenbar anjiyanji
muRRavaiyil mUDuvAyi nar

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment