குறளின் குரல் – 757

16th May 2014

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்.
                                 (குறள் 751: பொருள்செயல் வகை அதிகாரம்)

பொருள் அல்லவரைப் – தமக்கென ஒரு தகுதியுமில்லாரையும்
பொருளாகச் செய்யும் – ஒரு பொருட்டென பிறர் மதிக்கச் செய்யும் தகுதியைத் தரும்
பொருள் அல்லது – செல்வம் அல்லாமல்
இல்லை பொருள் – சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

தமக்கென்று ஒரு தகுதியும் இல்லாதவரையும் ஒரு பொருட்டென மதிக்கச் செய்யும் தகுதியைத் தரும் செல்வம் அல்லாமல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் வாக்கு, உறுதியான நாடும், அதை காக்கின்ற அரண் இருந்தாலும், பொருள் ஈட்டமும் தேவை என்பதைச் சொல்லும். தனிமனிதருக்கும், நாடு என்கிற ஒருங்கிணைந்த அமைப்புக்கும் இது பொருந்தும்.

கலித்தொகைப் பாடல் (14:10), “பொருளல்லால் பொருளும் உண்டோ” என்று இக்குறளின் கருத்தை ஒட்டியே வினவுகிறது.

வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும், 
அன்றி யும்கல்வி யோடழ காக்கலும்
குன்றி னார்களை குன்றென வாக்கலும்
பொன்றும் சாகத்தி னாய்பொருள் செய்யுமே” – என்கிறது சீவக சிந்தாமணிப் பாடல் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாக.

Transliteration:

poruLal lavaraip poruLAgach cheyyum
poruLlladhu illai poruL

poruL allavaraip – even the person not having any merits on own
poruLAgach cheyyum – to be respected as someone worth respecting
poruLlladhu – like wealth
illai poruL – there is none other better.

Even for a persom not having worthy merits on own, there is none better than his wealth to make the person worthy. “Even the world is not for people that have no wealth”, says an old adage. Though a nation and fortification are there to boast, without ways to build wealth to, what use would it be?

A verse in Jeevaka chinthAmaNi, says, making a person victorious, elevated, educated, bringing up the downtrodden from their abysmal state, giving a lasting status are done by wealth.

“There is none like wealth that makes even otherwise 
meritless to appear meritorious and worthy of praise”

இன்றெனது குறள்:

தகுதியிலார் தம்மையும் தக்காரென் றாக்கும்
மிகுபொருளின் மிக்கது இல்

thagudhiyilAr thammaiyum thakkAren RAkkum
mikuporuLin mikkadhu il

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment