குறளின் குரல் – 771

30th May 2014

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் 
ஆற்ற லதுவே படை.
                      (குறள் 765: படைமாட்சி அதிகாரம்)

கூற்று – மரண தேவன்
உடன்று – கோபித்து, சினந்து
மேல்வரினும் – எதிர் வரினும்
கூடி எதிர்நிற்கும் – ஒன்றாகக் கூடி நின்று எதிர்த்து நிற்கக்கூடிய
ஆற்றலதுவே – ஆற்றல் அதாவது திறனே
படை – படை,சேனை (என்று உலகம் போற்றும்)

ஒரு சிறந்த சேனையானது, மரணத்தை தரும் தேவனே சினந்து எதிர் வந்தாலும், ஒன்றாகச் சிதறாமல் நின்று அவனையும் எதிர்கொண்டு எதிர்த்து நிற்கும் திறனை உடையது. மீண்டும், இக்குறள் கூற்றுவனையே எதிர்க்கும் ஆணவத்தைக் குறிப்பிடாமல், அரசின் மீது அன்பையும், சிறந்த படைக்கு இருக்கக்கூடிய உயிரையும் அர்ப்பணிக்கும் உணர்வையும், ஒழுக்கத்தையும் அடிக்கோடிடுகிறது. இலக்கியங்களில் பலவும் கூற்றுவனுக்கு அஞ்சா மனவுறுதியைப் வீரர்களைப் பற்றிய பாடல்களில் குறிக்கின்றன. 

Transliteration:

kURRudanRu mElvarinum kUDi edirniRkum
ARRa laduvE paDai

kURRu – the lord of death
udanRu – in anger
mElvarinum – even if comes against
kUDi edirniRkum – congregate to stand against Him
ARRaladuvE – is the most capable
paDai – army

An excellent army is one that does not disintegrate and run away even when the God of death comes before them, with extreme anger. They stand united to face him and fight him. The intent of this verse is to not to show the arrogance of people that defy even death. It is out of love for the rule, the sacrificing quality, and the extreme discipline in facing the adverse and fierce enemies. 

“Even at the face of death lord with extreme fury
Not to fear and face united to fight is a real army”

இன்றெனது குறள்:

மரணதேவன் கோபித்து வந்தெதிர்த்தும் அஞ்சா
துரத்தொ டெதிர்ப்பதேசே னை

(மரணதேவன் கோபித்து வந்தெதிர்த்தும் அஞ்சாது உரத்தொடு எதிர்ப்பதே சேனை )

maraNadEvan kObiththu vandedirththum anjA
duraththo DedirppadEsE nai.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment