குறளின் குரல் – 868

4th Sep 2014

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
                        (குறள் 862: பகைமாட்சி அதிகாரம்)

அன்பிலன் – தான் பிறர்மேல் அன்பு கொள்ளாதவன்
ஆன்ற துணையிலன் – தமக்கு உற்ற வலிவான துணையென்று சொல்ல ஒருவருமில்லாதவன்
தான் துவ்வான் – தானாகவும் வலிமையில்லாதவன்
என்பரியும் – எவ்வாறு களைவான், நீக்குவான்
ஏதிலான் – தம்முடைய பகைவர்தம்
துப்பு – வலிமையை
 

பிறரோடு அன்பில் வாழாதவர்கள், தமக்கு உற்ற துணையென்று கூற ஒருவருமில்லாதவர்கள், தாமாகவும் வலிமையில்லாதவர்கள், எவ்வாறு தம்முடைய பகையின் வலிமையை, நீக்கமுடியும், தொலைக்கமுடியும்?

வலிமையை நீக்குவது என்பது, அதற்கெதிராக நின்று வெல்லுவது. பிறர்மேல் அன்பு கொள்ளும் தன்மை கொண்டவர்கள், அவர்கள் ஆதரவை வெல்லுவார்கள். அதேபோன்று உற்ற துணையாக ஒருவர் இருக்கையிலே அவர்களும் பகைக்கெதிராக ஆதரிப்பர். தாமே வலிமையோடு இருப்பின், அதுவும் பகையைத் தொலைக்க உதவும். இவ்வாறு தேவையானவை எதுவுமே இல்லாமல் எதிர்வரும் பகையைத் தொலைப்பது எவ்வாறு? என்ற கேள்வியை முன் வைக்கிறார் வள்ளுவர்?

Transliteration:

Anbilan AnRa thuNaiyilan thAnthuvvAn
Enbariyum EdilAn thuppu

Anbilan – Compassionless
AnRa thuNaiyilan – Does not have strong companionship
thAn thuvvAn – On his own does not have the strength
Enbariyum – how will he be rid of?
EdilAn – his opponents or enemies
Thuppu – strength?

How can a person without love and hence compassion for others, or without a true companion or without strength of his own, conquer a foe’s strength? – asks vaLLuvar through this verse.

To get rid of opponent’s strength is to stand against it and win over. How can a person without compassionate love for others, ask for or expect their support? At least if there are strong supporters they would stand with, to help face an opponent; or if a person on his own very strong, that would help also. When none of these is there, how can a person stand against his enemies?

Without compassionate love for others, or supporters or strength
On own, how can a person stand against opponent’s strength?

இன்றெனது குறள்:

அன்பற்றான், தன்வலிவும் நட்பின் வலிவுமற்றான்
என்நீக்கும் ஒன்னார் பகை?

anbaRRAn thanvaliyum naTpin valivumaRRAn
ennIkkum onnAr pagai?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment