குறளின் குரல் – 882

18th Sep 2014

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
                        (குறள் 876: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

தேறினும் – ஒருவன் தன் பகையை, அதன் வலிமையை முன்பு தெளிந்திருந்தாலும்
தேறாவிடினும் – அல்லது தெளியாதிருந்தாலும் பரவாயில்லை
அழிவின்கண் – ஆனால் அவனுக்கு நலிவுறும் அழிவு வரும்போது
தேறான் – அப்பகையத் தெளிந்ததுபோல் கூடுவதற்கு முயல்வதும்
பகாஅன் – அல்லது அப்போது நீங்குதலும்
விடல் – கூடாது, விட்டுவிட வேண்டும்

இக்குறளை அதன் வழி நின்று பொருள் கூறுவதிலும், இக்குறள் சொல்ல வருவது என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பகையை, அதன் வலிவை முன்பு அறிந்திருந்தாலோ, அறியாமலிருந்தாலும், தமக்கென்று கேடு வருகின்ற போது, வலிந்து சென்று நட்பு கொள்வது, அல்லது மேலும் பகை பாராட்டி நீங்குதலும் கூடாது, விட்டுவிட வேண்டும் என்கிறது குறள்.

அவ்வாறு தனக்கு கேடு வரும்போது நெருங்கி நட்பு பாராட்டுவோனை, பகைவர், தம்முடைய சுய நலத்துக்காகவே அந்நட்பு என்று உணர்ந்தால், அப்பகையினால் நிச்சயமாக அழிவே. அதேபோல், மேலும் பகை பெருகி, அவரை நீங்கி நின்றாலும், பகைவர்கள் அவனுடைய அழிவை உணர்ந்து, மேலும் துன்பத்தையே தருவர். இது போன்ற நேரங்களில் ஒருவன் ஒன்றும் செய்யாமல் வாளா இருத்தலே நன்று. மேலும் நீங்கி பெருக்குவதோ, நீங்காது நட்பு பாராட்டி, தம் வலியின்மையை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக்கொள்வதோ ஒருவனை மேலும் வலிமையிழக்கச் செய்யும்.

Transliteration:

thERinum thERA viDinum azhivinkaN
thERAn pagAan viDal

thERinum – even if a person had known his enemies strength
thERAviDinum – or not know how strong the enemy was,
azhivinkaN – when a person faces distress
thERAn – the person shall not attempt to get close
pagAan – or distance himself further
viDal – and leave the enmity as it is.

More than interpreting this verse as the verse stands, it is important to understand what it hints at indirectly. Whether or not a person (ruler) knew or understood his enemy’s strength, in the strategic interest, it is imperative, that he does not act only when facing a distress and maintain the status quo – is what alluded by the verse.

Why so? An enemy would be wary of a person who tries to come close, only during the time of distress and would see it as an act of selfish need. Similarly, if a person is seen further moving away, then it would be construed as weakness and would pave way for the enemy to charge further taking advantage. It is is prudent that nothing is done, making the enemy guessing as to what would come forth.

“Whether he is close or not with an enemy during normal times,
 Prudent it is for a person, not to do so during times of distress”

இன்றெனது குறள்:

நலிவுறும்கண் கூடாதீர் நீங்கீர் பகையின்
வலியறிந்தோ இன்றியோ முன்பு

nalivuRumkaN kUDAdIr nIngIr pagaiyin
valiyaRindO inRiyO munbu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment