குறளின் குரல் – 899

5th Oct 2014

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
                        (குறள் 893: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

கெடல் வேண்டின் – ஒருவர் கேடுற வேண்டுமாயின்
கேளாது செய்க – அறிவுசால் பெரியோரைக் கலந்து கேளாது வினையாற்றுக
அடல்வேண்டின் – அழிவுற வேண்டுமாயின்
ஆற்றுபவர்கண் – வலியாரை, வினையாற்றல் மிக்க பெரியாரை
இழுக்கு – பிழைத்துச் செய்தால், அவமதிப்பாக நடத்தினால் போதும்

ஒருவர் கேடு வேண்டுவானாயின் (நையாண்டித் தொனியுடன் கூறப்பட்டது), பெரியோரை கலந்து ஆராயாமல் வினையாற்றினால் போதும். அதேபோல், ஒருவன் அழிவுற வேண்டுமாயின், ஆற்றல் மிக்க வலியாரிடம், பெரியாரிடம் பிழைபட நடந்துகொண்டாலே போதும். அழிவு தானாக நடந்துவிடும். இக்குறள் கெடுவதில் உறுதி கொண்டவர்களை நையாண்டியாகக் கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி சென்ற குறளிந் கருத்தேதான் இதுவும்

Transliteration:

keDaivENDin kELAdu seiga aDalvENDin
ARRu bavarkaN izukku

keDaivENDin – If someone wants to ruin himself
kELAdu seiga – he shall act on deeds without consulting the great people, scholars.
aDalvENDin – if he wants to completely perish,
ARRu bavarkaN – towards the capable nd the great, he shall
Izukku – commit serious offenses and be disrespectful to them

If somebody desires ruin for himself, let him act without the counseling of knowledgeable and scholaryly elders. If he wants to perish, then he can commit offenses towards the capable persons of great stature. The tone of this verse is rather sarcastic, but for that, the content is similar to the earlier verse.

“To ruin, never consult the knowledgeable and scholarly
To perish, commit serious offenses to such scholarly”

இன்றெனது குறள்:

கேளாது செய்கவினை கேடுவேண்டின் செய்கபிழை
மீளாது மாளவலி யோர்க்கு

kELAdu seigavinai kEDuvENDin seigapizhai
mILAdu mALavali yOrkku.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment