குறளின் குரல் – 929

4th Nov 2014

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
                                  (குறள் 923: கள்ளுண்ணாமை அதிகாரம்) 

ஈன்றாள் – குற்றங்களை மறந்து மன்னிக்கும் தாயின்
முகத்தேயும் – முகத்துக்கே
இன்னாதால் – காணப் பொறாதத் துன்பம் தருவதாகிய (எது? கள்ளுண்ணல்)
என்மற்றுச் – எப்படி மற்று அவ்வாறு இல்லாது குற்றங்களைக் கடியும்
சான்றோர் – கற்றறிந்த சான்றோர்
முகத்துக் – முன்பாக, அவர்கள் முகத்துக்கெதிரே
களி. – கள்ளுண்டு களிப்பது சரியென்று கொள்ளப்படும்?

தாயென்பவள் எல்லா குற்றங்களையும் மறந்து மன்னிக்கக்கூடியவள். அவளுக்கே தம்மகன் கள்ளுண்டு கிடப்பது துன்பமும், காணப் பொறாததும் ஆகும். கற்றறிந்த சான்றோர், குற்றங்களைப் பொறாத இயல்பினர். சமூகம் குற்றமில்லாது இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள். அவர்கள் எவ்வாறு கள்ளுண்ணுபவர்களைப் பொறுத்துக்கொள்வார்கள்? என்று வினவுகிறார் வள்ளுவர்.

Transliteration:

InRAL mugaththEyum innAdAl enmaRRuch
chAnROr mugaththuk kaLi

InRAL – A mother who is generally forgiving
mugaththEyum – in front of her face
innAdAl – the pain of son drinking toddy is unbearable to her
enmaRRuch – how then, for usually unforgiving to maintain social order and justice
chAnROr – learned scholars
mugaththuk – before their face
kaLi – drinking toddy would be bearable?

A mother is usually a forgiving soul. Even she cannot bear and be painful, if she sees her son drinking toddy. How then learned scholars, that are usually unforgiving to keep the societal orders tolerate people drinking toddy before them?, asks vaLLuvar.

“Even an ever forgiving mother wouldn’t tolerate a toddy drinking son!
How else, unforgiving learned scholars, would just take it as some fun?”

இன்றெனது குறள்:

பெற்றாளே கள்ளுண்ணக் காணப் பொறாளாயின்
கற்றறிந்தோர் என்பொறுக்கும் அஃது?

PeRRALE kaLLUNNak kANAp poRALAyin
kaRRaRindOr enpoRukkum ahdu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment