குறளின் குரல் – 938

13th Nov 2014

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் 
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு?
                                   (குறள் 932: சூது அதிகாரம்) 

ஒன்றெய்தி – ஒரு பலன் பெறுவதற்காக
நூறிழக்கும் – நூறு பலன்களை இழக்கின்ற
சூதர்க்கும் – சூதாடிகளுக்கு
உண்டாங்கொல் – உண்டோ?
நன்றெய்தி – நல்லவற்றை அடைந்து
வாழ்வதோர் – வாழ்வதற்கான
ஆறு – வழி!

ஏதோ ஒரு ஆதாயத்தை அடைவதற்காய், பலவற்றை இழக்கும் சூதாடிகளுக்கு நல்லவற்றை அடைந்து வாழ்வதற்கான வழி ஏதேனும் உண்டா? இல்லை என்பது தொக்கி நிற்கும் பொருள்.

ஒன்று, நூறு என்கிற கணக்குக்கு வள்ளுவர் மகாபாரதத்தின் கௌரவர்களை அடிப்படையாகக் கொண்டே கூறியிருக்கலாம். இல்லையெனில் சிலவற்றைப் பெற்று பலவற்றை இழக்க நேரும் என்றோ, அல்லாது எல்லாவற்றையுமே இழக்கவேண்டும் என்றோ கூறியிருக்கலாமே!

மகாபாரதத்தைப் பொருத்தவரை இக்குறள் கௌரவர் அனைவருக்கும், துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் எல்லோருக்கும் ஒன்று-நூறு என்கிற கணக்கு, பொருந்துவதே. தம் நூறு மகன்களின் நலனுக்காக, குறிப்பாக துரியோதனின் மேலிருந்த குருட்டுத்தனமான பாசத்துக்காக, திருதராட்டிரன் சூதாட அனுமதி அளித்தான்; சகுனியோ தம் தங்கையின் நூறு புதல்வர்களும் குறிப்பாக துரியோதனும் நலமாக இருக்க, பாண்டவர்களை ஒழிக்க எண்ணினான்; துரியோதனோ பிறவியிலேயே குணக்கேடன். பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமைக்காக, தாமே நாட்டை அடையவேண்டுமென்கிற ஆசையில் சகுனியின் துணையுடன், திருதராட்டிரன் அனுமதி பெற்று, வஞ்சக சூதிலே பாண்டவர்களை வென்றாலும் முடிவில் இவர்களெல்லாம் அடைந்தது என்ன? நூறு புதல்வர்களை திருதராட்டிரனும், நூறு மருகன்களை சகுனியும், துரியோதனன், தம்மோடு சேர்த்து நூறு சகோதரகளையுமே இறுதியில் இழந்தார்கள். இவர்கள் சூதால் ஒன்றை அடைந்தாலும், இறுதியில் பெற்றது என்ன? நூறை இழந்தார்களே!

Transliteration:

OnReidhi nUrizhakkum sUdarkkum uNDAngkol
nanReidhu vAzhvadhOr Aru?

OnReidhi – for a single benefit
nUrizhakkum – losing all the hundred other benefits
sUdarkkum – those that gamble
uNDAngkol – Is there?
NanReidhu – gaining good benefits
vAzhvadhOr – and living with those good benefits
Aru? – a way!

If a person, for gaining one benefit, loses hundreds in gamble, is there way for him to survive and gain any good? None, implies vaLLuvar.

The specific counts of one and hundred in this verse seem to be based on Kauravas of Mahabharata. If not, the poet could have simply said, a few gains and many a losses.

This verse is equally applicable to all three, Dhridarashtra, Sakuni and DhuryOdanA. To secure the state for his hundred sons and blinded by his love for the first born Dhuryodhana, Dhridarashtra allowed the game of dice. Sakuni blinded by his love for his sister, wanted to secure the state for his nephews. Dhuryodhana driven by jealousy and the avarice to rule, wanted to eradicate the trace of Pandavas. All of them lost hundred – Dhridarashtra, his hundred sons, Sakuni his hundre nephews and finally Dhuryodhana, including himself, all his siblings. They attained a temporary, and transient gratification of winning over Pandavas in the game of dice; but in the end, lost everything they had including their lives.

“For those that lose hundred benefits for one
is there way to live gaining any good? None!”

இன்றெனது குறள்:

உற்றதெல்லாம் ஒன்றேயாம் மற்றதெல்லாம் அற்றதாகும்
பெற்றெதை வாழ்வார்சூ தால்?

uRRadhellAm onREyAm maRRadhellAm aRRadhAgum
peRRedhai vAzhvArsU dAl?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment