குறளின் குரல் – 953

28th Nov 2014

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்.
                                 (குறள் 947: மருந்து அதிகாரம்)

தீ அளவு – பசியின் அளவு
அன்றித் – (அறியாதது மட்டும்) அல்லாமல்
தெரியான் – (உண்ணும் காலமும்) தெரியாது ஒருவன்
பெரிது உண்ணின் – மிகுந்த அளவில் உண்ணுவானே ஆனால்
நோய் – வியாதிகளை
அளவின்றிப் படும். – இவ்வளவென்று சொல்லமுடியாத அளவுக்கு பட்டுழல்வர்.

பசியின் அளவு இன்னதென்று தெரியாமலும், எப்போது உண்ணுவதற்கு ஏற்றகாலமென்று தெரியாமலும், ஒருவன் பெரும் தீனி உண்பானாயின், அவன் அதன் காராணமாகவே இன்னளவு என்று கூறவியலாத அளவுக்கு வியாதிகளுக்கு ஆட்பட்டழிவான் என்று அளவும், நேரமும் அறிந்தே உண்ணவேண்டியதை வலியுறுத்துகிறார் வள்ளுவர் இங்கே.

முதுமொழிக் காஞ்சி, “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது” என்பதும், ஆத்திச் சூடி, “மீதூண் விரும்பேல்” என்பதும் இக்குறளின் கருத்தையொட்டி, உணவை மிகுந்த அளவில் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்துத்தவேதான்.

Transliteration:

tIyaLa vanRit teriyAn periduNNin
nOyaLa vinRip paDum

tI aLavu – without knowing the heat of hunger (extent of hunger)
anRit – not only that
teriyAn – not knowing the time duration required between two meals
perid(u) uNNin – if a person eats excessively
nOi – Diseases
aLavinRip paDum – will be subject to it without measure.

Without knowing the extent of hungers’ heat, and the time to eat each meal, if a person eats excessively, gluttonously he shall be subject to immeasurable diseases and destroyed, says this verse underscoring the importance of eating in time and when the intensity of hunger is right enough to feed self.

The following Mudumozhi kAnchi and Athichoodi lines stress the importance of not eating gluttonously: “uNDi veyyOrkku uRupiNi eLidu” (Mudumozhi Kanchi); “mIdUN virumbEl” (Attich chUDi).

“Gluttonous eating not knowing the extent of heat of hunger
nor the time, shall get one diseases immeasurable to linger”

இன்றெனது குறள்:

பசியளவை எண்ணார் பெரிதளவில் உண்பார்
நசித்தழிவார் நோய்வாயிற் பட்டு

pasiyaLavai eNNAr peridaLavil uNbAr
nasitthazhivAr nOivAyiR paTTu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment