குறளின் குரல் – 963

8th Dec 2014

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் 
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
                              (குறள் 957: குடிமை அதிகாரம்)

குடிப் பிறந்தார்கண் – நற்குடிப் பிறந்தார்க்கண்
விளங்கும் குற்றம் – இருக்கக்கூடிய குற்றங்களாயவை
விசும்பின் – வானத்திலே
மதிக்கண் – தெரியும் வெண்மதியிலே எல்லோரும் காணுமாறு தெரிகின்ற
மறுப்போல் – களங்கம் போல
உயர்ந்து – ஓங்கித் தோன்றும்

குற்றத்திலே ஊறியவர்கள் குற்றங்கள் கூட பிறருக்கு ஒரு பொருட்டாக இராமல் போகலாம். ஆனால் நற்குடித் தோன்றினாராது சிறு குற்றங்கள் கூட வெண்ணிலவின் களங்கமானது உலகுக்கே வெட்ட வெளிச்சமாவதுபோல, ஓங்கித் தோன்றும்.

நல்லோராய் வாழ்ந்து முடிவது என்பது எல்லோர்க்கும் இயலுவதில்லை. விசும்பு என்றதால் குடிப்பிறப்பின் உயர்வும், களங்கமில்லா மதியால் உயர்ந்த குணங்களை உடையவர் நற்குடிப்பிறப்பாளர் என்பதும் அறியப்படுகிறது.

நற்குடிப்பிறப்பாளரின் குற்றங்களை மதியின் களங்கத்தோடு ஒப்பு நோக்கும் பல பாடல்கள் உள்ளன, இலக்கியங்களிலிருந்து.

திங்களைப்போற் சான்றோர் களங்கம் இருப்பினும் வாளா இரார் என்பதால், அவர் அதனினுஞ் சிறந்தவராவர் என்கிறது நாலடியார் பாடலொன்று.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

பழமொழிப்பாடலொன்று படித்த மாத்திரத்தில் விளங்குமாறு, “ பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு” என்கிறது.

மணிமேகலையும் கம்பராமாயாணமும் இதே ஒப்புமையையே கீழ்காணும் பாடல்களிலே கூறுவதைப் பார்க்கலாம்,

வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர 
                                      (மணிமேகலை சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை)

வாலி இராமனைச் சாடுவதாக அமைந்த இப்பாடலும் இவ்வுவமையை அழகாகக் கூறுகிறது.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ 
                                    (கம்பராமாயணம் வாலிவதைப்படலம்)

Transliteration:

kuDippiRandAr kaNviLangum kuRRam visumbin
madikkaN maRuppOl uyarndu

kuDip piRandArkaN – People of noble birth
viLangum kuRRam – the faults in them
visumbin – that which is on the sky
madikkaN – on the moon
maRuppOl – like the blemishes (on the mood)
uyarndu – will be seen

None minds the faults of those are entrenched in faults and blemishful habitually. But if the people of noble birth are found to be faulty or have blemishes, it will show highlighted like the blemishes on the otherwise faultless white moon.

To be born and die as faultless is not a feable or possible accomplishment for everyone. The word “visumbu” (sky) implies the noble birth of elevated nature. The blemishless moon would imply highly virtuous nature of nobility.

There are many literary examples from nAlaDiyAr, pazhamozhi, aRaneRich chAram, maNimEgalai and kamba rAmAyaNam that have take the same metaphor to speak similarly.

nAlaDiyAr says, noble people shall not tolerate the blemishes like a moon. A pazhamozhi poem likens the blemish in nobility to the blemish on moon.

In kambarAmAyanAm, vaLi cites the same metaphor, blames rAma for killing him, from hiding.

“Like the blemishes of sky-borne moon are for everyone to see
So are faults of high-born, from worlds’ view one cannot flee”

இன்றெனது குறள்:

வான்வெண் மதிக்குற்றம் யாவர்க்கும் காண்பதுபோல்
தோன்றும் குடிப்பிறந்தார் மாசு

vAnveN madikkuRRam yAvarkkum kANbadupOl
thOnRum kuDippiRandAr mAsu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment