குறளின் குரல் – 973

18th Dec 2014

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே 
கெட்டான் எனப்படுதல் நன்று.
                        (குறள் 967: மானம் அதிகாரம்)

ஒட்டார் – பகைவர்
பின் சென்று – அவரை அண்டி
ஒருவன் வாழ்தலின் – ஒருவர் தம் வாழ்வைக் காத்துக்கொள்வதிலும்
அந்நிலையே – அத்தகைய இழிநிலையில் இல்லாமல்
கெட்டான் எனப்படுதல் – அழிந்துபட்டான் என்றறியப் படுதலே
நன்று – மானமுள்ளவர்க்கு நன்றாகும்

பகைவரை அண்டி ஒருவன் மானமிழந்து பிழைப்பதிலும், மானத்தைக் காப்பதற்காக ஒருவன் வாழாது அழிந்துப்பட்டான் என்பதே நன்று என்கிறது இக்குறள். மானமற்றோரே தாம் வாழ்வதற்காக பகைவரை அண்டி அவரிடும் பிச்சையினால் உயிர் வளர்ப்பர்

Transliteration:

OTTArpin chenRoruvan vAzhdalin annilaiyE
keTTAn enappaDudal nanRu

OTTAr – enemies
pin chenR(u) – going behind them
oruvan vAzhdalin – to save and live at their mercy
annilaiyE – that despicable, dishonorable, shameful state
keTTAn enappaDudal – known to be destroyed, dead is
nanRu – better.

Instead of living dishonorably, under the mercy of an enemy, honorably losing life, perish is better, says this verse. Only dishonorable will indulge shamefully living under enemies just for their survival.

“To perish without losing honor is better
than going behind foe to live like a litter”

இன்றெனது குறள்:

பகையண்டிப் பால்பருகி இன்னுயிர்காக் கின்ற
வகையினும் சாக்காடே மேல்

pagaiyaNDip pAlparugi innuyirkAk kinRa
vagaiyinum sAkkADE mEl

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment