குறளின் குரல் – 983

28th Dec 2014

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்  
சீரல் லவர்கண் படின்.
                                 (குறள் 977: பெருமை அதிகாரம்)

இறப்பே புரிந்த – எல்லை மீறுகை
தொழிற்றாம் – செயல்களைச் செய்வர்
சிறப்புந்தான் – சிறப்பாம் பெருமையானது
சீரல்லவர்கண் – பொருந்தாத சிறுமைக் குணம் கொண்டவர்களிடம்
படின் – ஏற்படுமானால்

இக்குறளுக்கான பரிமேலழகர் உரை சற்றே குழப்பமாக உள்ளது. இக்குறளின் பின்பகுதி பொருள் விளங்குவதாயும், முற்பகுதி எளிதாக விளங்காததாயும் உள்ளது. சிறப்பாம் பெருமை, பொருந்தாத சிறுமைக்குணம் கொண்டவர்க்கு ஏற்படுமானால், அவர்கள் மற்றவர்கள் வருந்தும் படியாக, வரம்பு மீறுதலையே செய்வர் என்று குறள் பொருள் படவேண்டும். “இறப்பே” என்ற சொல் வரம்பு மீறுதலையே குறிக்கிறது.

தகுதியில்லார்க்கு வழங்கப்படும் எத்தகு பெருமையும் தவறாகவே பயன்படுத்தப்படும் என்பதே மையக்கருத்து.

Transliteration:

iRappE purinda thozhiRRAm chiRappundAn
ChiRal lavarkaN paDin

iRappE purinda – transgressing by going beyond the limits
thozhiRRAm – they will do such deeds
chiRappundAn – the glory
ChiRallavarkaN – that does not fit the people of small mindedness
paDin – if they get it.

ParimElazhagars’ commentary for this verse, is a bit confusing. Though the later half of the verse is easy to understand, the first part is not very apparent in its meaning. The word “iRappE” in the verse means, crossing the limits. The verse must be interpreted thus: If lowly people get greatness or glory, they will act excessively for others to suffer.

“Though the lowly people, small minded, may get glory 
In their deeds, they will cross all limits to others worry”

இன்றெனது குறள்:

பெருமையும் ஒவ்வாச் சிறுமையாளர் பெற்றால்
வருத்தும் வரம்புமீறி செய்து

perumaiyum ovvAch siRumaiyALar peRRAl
varuththum varambumIRi seidu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment