குறளின் குரல் – 1018

1st Feb 2015

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
                                       (குறள் 1012: நாணுடைமை அதிகாரம்)

ஊண் – உண்ணும் ஊணவும்
உடை – உடுக்கும் உடையும்
எச்சம் – மற்ற பிற மேன்மையாகக் காட்டுகிற அடையாளங்களும்
உயிர்க்கெல்லாம் வேறல்ல – எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை
நாணுடைமை – ஆனால் பழிக்கஞ்சி நாணுதல்
மாந்தர் சிறப்பு – நல்ல மக்களை சிறப்பாக வேறுபடுத்தி காட்டுவதாம்

எல்லோருக்குமே உணவும், உடையும், மற்ற பிற அடையாளங்களும் பொதுவானவையே, அவர்களை சிறப்பித்து காட்டாதவை. அதாவது எல்லோருமே உண்ணுகிறார்கள்; உடுக்கிறார்கள், மற்றபல அடையாளக் குறிகளால் தங்களை பொருளாதார மேன்மை உடையவராக, சிறப்புகள் வாய்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அறுசுவை உண்ணுவதாலும், அழகான உடை உடுப்பதாலும் ஒருவர் மேன்மையுறுவதில்லை. ஆனால் ஒருவரை சிறந்தவராகக் காட்டுவது அவரது பழிபாவத்துக்கு அஞ்சுகிற நாணுடைமையேயாம்.

Transliteration:

UNuDai echcham uyirkellAm vERall
naNUDaimai mAndar siRappu.

UN – the food that one consumes
uDai – the dresses that he wears
echcham – other decorations that show the apparent glory
uyirkellAm vERall – are all not different for anyone.
naNUDaimai – the sensitivity to shame
mAndar siRappu – makes all the differenc and is the true glory

Food that people eat, the dresses they wear are common features in everyones’ life, not different; they don’t show them in exemplary light. After all everyone eats and wears dresses and show through other attributes their status and assumed glory etc,. The gourmet food or beautiful dresses don’t show the true glory of anyone. What makes a person truly exemplary is their sensitivity to shame that they show when they even inadvertently involved in blameful deeds.

“Food, dresses and other such similar needs are common;
But the sensitivity to shame is the real differentiating one”

இன்றெனது குறள்(கள்):

உணவும் உடையும் பிறவும் பொதுயார்க்கும்
வணங்கும் சிறப்பினதோ நாண்

uNavum uDaiyum piRavum pothuyArkkum
vaNangum siRappinadO nAN

சிறப்பென்ப ஊணுடையும் மற்றதும் அன்று
அறம்துறக்கா நாணுடைமை யாம்

siRappenba UNDaiyum maRRadum anRu
aRamthuRakkA nANuDaimai yAm

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment