குறளின் குரல் – 1126

20th May, 2015

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் 
அடிக்கு நெருஞ்சிப் பழம். 
                         (குறள் 1130: நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)

அனிச்சமும் – மென்மையான அனிச்சப் பூவும்
அன்னத்தின் தூவியும் – அன்னத்தினுடைய இளஞ்சிறகும்
மாதர் அடிக்கு – இம்மாதின் பாதங்களுக்கு
நெருஞ்சிப் பழம் – நெருஞ்சி முள் போன்று கொடிய துன்பமாம்

இவற்றைவிட மென்மையானவை இல்லை என்று சொல்லக்கூடிய அனிச்ச மலரும், அன்னத்தின் இறகுமே நெருஞ்சி முள்ளாகத் தைக்குமளவுக்கு மென்மையாகன பாதங்களைக் கொண்டவள் என்னால் விரும்பபடுகிற இம்மாது, என்று காதலன் காதலியின் பாத மென்மையை உயர்த்திக் கூறுகிறான். சீவக சிந்தாமணி காப்பிய ஆசிரியருக்கும், இதே கற்பனை உதவியிருப்பதைக் காணலாம்.

“அம்மெல் அனிச்சமலரும் அன்னத் தூவியும்
வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் நிலவப் பூம்போதனநின் அடி” (சீ.2454)

அனித்த மிதிப்பினும் பனித்தல் ஆனா ஒளிச்செஞ் சீறடி” என்று பெருங்கதை வரியும், அனிசத்தினும் மென்மையானது பாதமென்று கூறுகிறது

Transliteration:

Anicchamum annattin tUviyum mAdar
aDikku nerunjip pazham

Anicchamum – the soft anicha flower
annattin tUviyum – and the soft feathers of swan
mAdar – my maiden
aDikku – for her feet
nerunjip pazham – like thorn.

Even the softest flower aniccham and the light feathers of swan do feel like a thorn compared to the even softer feet of my maiden, says the man in love. This kind of comparisons have are seen in Perungadai and Cheeva chintaamani also.

“Even the aniccham flower and the swans’ feathers so light
feel like the thorns of Nerunji compared to my maidens’ feet”

இன்றெனது குறள்:

அணங்கின் அடிகட்கு அன்னத் திறகும்
நுணங்கும் அனிச்சமும் முள்

aNangin aDigaTku annat tiRagum
nuNangum anichchamum muL

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment