குறளின் குரல் – 1137

31st May, 2015

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் 
மடலல்லது இல்லை வலி.
                             (குறள் 1131: நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

காமம் – தீவிர காதலில்
உழந்து வருந்தினார்க்கு – மூழ்கி, (காதலிக்கப்பட்டவரிடம் கிடைக்காமல்) வருந்தும் ஆணுக்கு
ஏமம் – துணையென்பது
மடலல்லது – மடலேறுதல் (பனையோலையால் செய்யப்பட்ட குதிரை)
இல்லை வலி – இல்லையாம் வன்மை மிக்கது

தீவிரமாக ஒரு பெண்ணைக் காதலித்து, (காமத்தை பெரும்பாலும் உரையாசிரியர்கள், உடலுறவு என்ற அளவிலேயே சொல்லியிருந்தாலும், தீவிர காதல் என்பது, பண்பாட்டுக்கு ஏற்புடையதாக இருக்கும்). அது காதலிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கிடைக்காமல் போகும் ஆணுக்கு ஏற்ற துணையென்பது, ஆணுக்கு இழிவுதரும், மடலேறுதல் எனப்படும் பழந்தமிழர் வழக்கமான, பனையோலை குதிரையேறி ஊரரிய அவன் காதலை வெளிப்படுத்தும் செயல்தான். அதை விட வலிமையான உபாயம் வேறு இல்லை.

மடலேறுதலை விக்கிமூலம் இவ்வாறு விளக்குகிறது. 

மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திறுநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ’மடல்’ ஆகும்.

இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.

மடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு”

திருக்குறளில் பல இடங்களில் மடலூர்தலைப் பற்றி பேசப்படுகிறது.

Transliteration:

kAmam uzahndu varundinArkku Emam
maDalalladu illai vali

kAmam – In love
uzahndu varundinArkku – immersed and tormented by her love
Emam – what is safety
maDalalladu – riding a horse made of palmyra leaves
illai vali – none efficient.

When a man has been in intimate relationship (conjugal) with his maiden and later, is not able to get that, there is no other way, except riding the horse made of palmyra leaves for professing his love in public. This act that existed in old-tamil culture dating Sangam period, was considered demeaning to a male; but there was none other stronger means to express his love.

Madal Urdal”, was an act that a man in love did to win his lovers hand, if his love failed for whatever reason. For the townsmen to know his love, he would anoint himself with ash, mostly untouched flower yarcum, and ride a toy horse made of palmyra leaves, shouting his lovers’ name in public in a procession. Such self-demeaning act was employed or a threat that he would such an act was the usual tact of men in excessive love.

This seems to have been a popular act during VaLLuvars’ time or from before him too. He has used the same in many verses.

“Immersed deeply in intimate love with maiden and not reciprocated the same
for a man, none more efficient than riding a polmyra horse, shedding shame”

இன்றெனது குறள்:

மடலேற லின்வன்மை யாம்துணை இல்லை
உடற்றுகா மத்துழன் றார்க்கு

(உடற்று – வருத்தும்)

madalERa linvanmai yAmtuNai illai
uDaRRukA mattuzan RArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment