குறளின் குரல் – 1175

8th Jul, 2015

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் 
நெடிய கழியும் இரா.
                        (குறள் 1169: படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)

கொடியார் – என்னை விட்டு, ஆற்றேன் என்றறிந்தும் நீங்கிச் சென்ற என் காதலர்
கொடுமையின் – இன்னும் வாராது செய்திருக்கிற துன்பத்தைவிட
தாம்கொடிய – துன்பம் தருகின்றன
விந்நாள் – அவர் என்னைப் பிரிந்திருக்கிற இந் நாட்களில்
நெடிய கழியும் – மிகவும் மெல்ல ஊர்ந்து கழிகின்றனவே
இரா – இரவுப் பொழுதுகள்

தன்னை நீங்கிச் சென்ற தலைவனை நினைந்து தலைவி நெடுமூச்சோடு ஏங்கிக் கூறுகிறாள் இவ்வாறு! அவ்வாறு சென்றவர் மனதில் இரக்கமில்லாக் கொடியவர்; அவர் என்னை நீங்கி இருக்கிற இந்நாட்களில் நீண்டு நத்தையாக ஊர்கின்ற முடிவில்லா இரவுகள், அவர் என்னுடைய ஏக்கத்தை மனதில் கொள்ளாது விட்டுச் சென்றிருக்கிற, துன்பம் தருகிற கொடுஞ் செயலைவிட மிகவும் கொடுமை செய்கின்றன,

ஏற்கனவேப் பசலை படர்ந்து மெலிந்த உடல்; கண்களில் வேறு தூங்காமல் கருவளையங்கள் என்று அவளுற்ற துன்ப ஆற்றாமையின் வெளிப்பாடாக உள்ளது இக்குறள்.

Transliteration:

koDiyAr koDumaiyin tAmkODiya vinnAL
neDiyak kazhiyum irA.

koDiyAr – Despite knowing my inability to bear his separation.
koDumaiyin – more than the misery he has caused
tAmkODiya – miserable
vinnAL – these days (the days of separation)
neDiyak kazhiyum – the long and slowly moving
irA – nights!

The pining maiden, thinking of her lover, that has gone away, expresses her pain and misery of the nights she has to pass in misery. She calls him cruel for going away not considering her inability to bear that separation; but more miserable/cruel are the long and slowly moving nights, without his closeness, she complains.

Her skin tone has already grown pale with this separation; now even the eyes have dark circles because of these sleepless nights. What could be more miserable or cruel than this?

“More cruel than what my lover has done, by his going away
are the long painful nights, keeping me in cruel, wakeful stay”

இன்றெனது குறள்:

நீங்கியார் செய்துன்பில் நீளிரா நாட்களாய்
ஏங்குதல் துன்பிலும் துன்பு

nIngiyAr seithunbil nILirA nAtkaLAi
Engudal tunbilum tunbu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment