குறளின் குரல் – 1185

18th Jul, 2015

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை 
ஆரஞர் உற்றன கண்.
                             (குறள் 1179: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

வாராக்கால் துஞ்சா – தலைவன் வரவில்லையென்றாலும் வரவை எதிர்நோக்கி தூங்கா என்கண்கள்
வரின் துஞ்சா – வந்தாலும் எங்கே சென்றுவிடுவானோ என்றஞ்சி தூங்கா என்கண்கள்
ஆயிடை – ஆக இரண்டு நிலைக்கிடையிலும்
ஆர் அஞர் – மிகுந்த துன்பம், உளைச்சலை, நோயை (காமத்தால் வருவது)
உற்றன கண் – கொண்டன என் கண்கள்

நீ பிறிவாற்றி துயிலேன் என்னும் தோழிக்குக் காதற் தலைமகள் கூறுகிறாளாம் இவ்வாறு. “என் செய்வேன்? அவர் வரவில்லையென்றாலும், அவர் வரும் வழிபார்த்து தூங்காமல் இருக்கின்றன என் கண்கள். அவர் இங்கு வந்துவிட்டாலோ, எங்கே மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரோ என்று அஞ்சி தூங்காமல் உள்ளன என்னுடைய கண்கள். ஆக இரண்டு நிலைக்கிடையிலும் என் கண்கள் உறுவதென்னவோ, மிக்க துன்பத்தைத் தரும் காதல் நோயைத்தான்” என்று நொந்து கூறுகிறாள். வந்தபோது கண் துஞ்சாதிருப்பது கலவியினால் என்று பரிதியார் என்னும் உரையாசிரியர் கூறுவதும் பொருந்துவதே!

Transliteration:

vArAkkAl tunjA varin tunjA AyiDai
Aranjar uRRana kaN

vArAkkAl tunjA – When he is not back, my eyes won’t sleep looking for his return
varin tunjA – When he comes back, even then they wont sleep, fearing his separation
AyiDai – So between these two states
Ar anjar – excessive misery due to this disease of desire
uRRana kaN – my eyes have

Why don’t you bear this separation and try to sleep, says the friend of the maiden! In reply, the maiden says: “What can I do? If my lover does not return, my eyes wait his arrival and are sleepless. When he is here, eyes refuse to sleep fearing what if he would leave! So, between these two states, my eyes are caught up and are miserable, dwelling in the disease of lust.” . ParidhiyAr (another commentator) says when the lover with her, the maiden would not sleep because of persisting desire of lust or togetherness, seemingly an acceptable interpretation too.

“In unbearable agony are my eyes, whether he is away or he returns,
both giving sleeplessness anyway, with this intense desire that burns!

இன்றெனது குறள்:

வந்தாலும் வாராதா ராயினும் என்கண்கள்
நொந்தே உறங்கா விழித்து

vandAlum vArAdA rAyinum enkaNgaL
nondE uRangA vizhittu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment