குறளின் குரல் – 1206

8th Aug, 2015

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
                                    (குறள் 1200: தனிப்படர் மிகுதி அதிகாரம்)

உறாஅர்க்கு – உன்னோடு இல்லார்க்கு
உறுநோய் உரைப்பாய்– உன் படர்பற்றி உரைத்துக்கொண்டிருக்கிறாயே
கடலைச் செறாஅஅய்– (அதனினும்) கடலை தூரெடுத்து நிரப்பி
வாழிய நெஞ்சு – நீ வாழலாம் நெஞ்சே (அதுவே எளிதானது)

இக்குறளில் தன் தலைவனுக்கு அவனுடைய பிரிவு ஆற்றாமையால் படர் உற்றதை தூது சொல்ல விழையும் காதற்தலைவி, பிறகு அது விழலுக்கு இறைத்த நீர் என்பதை உணர்ந்து தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறாளாம். உன்னோடு இல்லாது சென்று விட்ட தலைவனுக்கா நீ தூது சொல்ல விழைகிறாய் என் நெஞ்சே! அவன் உள்ளத்தை கரைப்பதிலும், கடலைத் தூர் செய்து நிரப்புதல் எளிதல்லவா! அதைச் செய்து நீ வாழலாமே என்கிறாள் மிகவும் உளம் நொந்து.

Transliteration:

uRAarkku uRunOi uraippAi kaDalaich
cheRAaai vAzhiya nenju

uRAarkku – to the man who does not live with you and has left you in this state
uRunOi uraippAi – you want to convey your pain
kaDalaich cheRAaai – (instead) you can make the sea deep to fill it full
vAzhiya nenju – and can live happily, O Mind!

In this verse the maiden wants to convey her pain of separation to her man that she is in love with. Then she realizes that it is a wasted effort and addresses her mind to work on filling up the sea instead of trying to melt his heart, as it would be easier. The verse expresses the maidens’ dejected state of mind.

“O! mind. Instead of trying to convey your pain of separation
to the one who has left you, you’re better of filling an ocean”

இன்றெனது குறள்:

கொஞ்சமும் உன்துன் பறியார்க்கு கூறலின்
நெஞ்சேநீ வாழ்கடல் தூர்த்து

konjamum unthun paRiyArkku kURalin
nenjEnI vAzhkaDal thUrttu.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment