குறளின் குரல் – 1223

25th Aug, 2015

நனவினால் நல்காக் கொடியார் கனவனால் 
என்எம்மைப் பீழிப் பது.
                          (குறள் 1217: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவினால் – நான் விழித்திருக்கையிலே
நல்காக் – எனக்கு வந்து தம்மன்பை தராத
கொடியார் – வன்னெஞ்சினரான காதலர்.
கனவனால் – என்னுடைய கனவில் வந்து
என் எம்மைப் – எதற்காக என்னை
பீழிப்பது – வருத்தி துன்பம் தருகிறார்?

இக்குறளில் பிறிவாற்றமையில் இருக்கும் காதற்தலைவி, தன் காதலர் கனவில் மட்டும் வந்து வருத்துவதை நொந்து, “ஈதென்ன, நான் விழித்திருக்கையில் வந்து எனக்கன்பைத் தராத கொடும் நெஞ்சினரான என்னுடைய காதலர், இப்போது கனவிலே மட்டும் வந்து இப்படி நான் வருந்த துன்பம் தருகிறாரே“ என்று அலுத்துக்கொள்கிறாள்

Transliteration:

nanavinAl nalgAk koDiyAr kanavanAl
enemmaip pIzhi padu

nanavinAl – When I am wakeful
nalgAk – not showing his kindness and compassion
koDiyAr – the hard-hearted lover
kanavanAl – appearing in my dream
en emmaip – why to me?
pIzhipadu – give pain and misery?

The maiden that laments her lover being away, says, “What is this? When I am awake, my lover does not come and show is love and kindness; when then he appears now in my dream and inflicts pain and misery?

“That who does not show his loving compassion while awake,
In my dreams he appears and gives me misery, for what sake?”

இன்றெனது குறள்:

விழிப்பில் வராதவன் னெஞ்சர் கனவில்
கழித்துன்பத் தாழ்த்துவ தென்?

Vizhippil varAdavan nenjar kanavil
Kazhittunbat tAzhtuva then?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment