குறளின் குரல் – 1243

14th Sep, 2015

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 
வாடுதோட் பூசல் உரைத்து.
                        (குறள் 1237: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

பாடு பெறுதியோ நெஞ்சே – பெருமையும் அழகும் கொள்வாய் நெஞ்சே
கொடியார்க்கென் – என்னை விட்டு நீங்கியிருக்கிற கொடிய நெஞ்சினராம் காதலர்க்கு
வாடு தோட் – தோள்கள் வாடி மெலிந்ததைப் பற்றி
பூசல் உரைத்து – ஊரார் பேசும் அலர்பற்றி சொல்லி.

என்னைவிட்டு நீங்கியிருக்கிற கொடியரான என் காதலர்க்கு, என்னுடைய தோள்கள் வாடியதைக் கண்டு ஊரார் அலர் பேசுதலை சொல்லி, அதன்மூலம், ஆறுதல் அடைந்து, வாட்டம் நீங்கி அழகு பெறுவாயா? என்று கேட்கிறாள் காதற் தலைவி இக்குறளில். இதை நெஞ்சுவிடு தூதென்று கூறலாம். இதனால் நெஞ்சு எப்படி வாட்டம் நீங்கும் என்ற ஐயம் ஏற்படலாம்? நெஞ்சு சென்று உரைத்தலால், காதற் தலைவன், தலைவியின் துயரை ஆற்ற மீண்டும் வருவார். அந்த நற்செயலுக்குண்டான பயனை நீ பெறுவதால் அழகுறுவாய் என்கிறாள் தலைவி.

Transliteration:

pADu peRudiyO nenjE koDiyArkken
vADutOT pUsal uraittu

pADu peRudiyO nenjE – Be glorious, my heart
koDiyArkken – to the hard-hearted and cruel lover of mine
vADutOT – my withered and thinning shoulders
pUsal uraittu – telling him what the town complains, seeing them (the thinning shoulders)

O! Heart, please go and tell the cruel lover of mine that has gone away leaving me, about what the town speaks about my shriveled and withered shoulders; by doing that service you would attain glory, says this verse. One may wonder how by doing this service, heart would gain glory? Perhaps the lover would understand the pangs of the maiden and come back to cosole her and that would indeed be a service for the heart to attain that glory.

“Won’t you please go and tell my cruel, hard-hearted and gone-away lover
what the town talks of my withered shoulders; and be glorious for this favor?”

இன்றெனது குறள்:

மெலிந்தவென் தோள்பற்றி பொல்லார்க்குச் சொல்லி
பொலிவை பெறுவாய்நெஞ் சே

melindaven tOLpaRRi pollArkkuc choLLi
polivai peRuvAinen jE

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment