குறளின் குரல் – 1259

30th Sep, 2015

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
                                        (குறள் 1253: நிறையழிதல் அதிகாரம்)

மறைப்பேன்மன் – ஒளிக்கவே முயல்கிறேன்
காமத்தை யானோ – என்னுள் எழும் தலைவனோடு முயங்கும் ஆசையை
குறிப்பின்றித் – அதுவோ தோன்றுவதன் அறிகுறியில்லாமல் திடீரென்று
தும்மல்போல் தோன்றி விடும் – தும்மல் அடங்காது வெடிப்பதுபோல் தோன்றிவிடும்

காமம் இருப்பினும் அதை பெண்டிர் மறைக்கவேண்டும் என்ற தோழிக்கு, தலைவி இவ்வாறு கூறுவாள்: “நானோ என் தலைவனோடு முயங்குகிற ஆசையை மறைக்கத்தான் முயல்கிறேன். ஆனால், என் செய்ய? அது திடீரென்று வெடிக்கும் கட்டுப்படுத்த இயலாது வரும் தும்மலைப்போல!

Transliteration:

maRaippEnman kAmattai yAnO kuRippinRit
tummalpOl tOnRi viDum

maRaippEnman – Trying to hide
kAmattai yAnO – the lust in me to be with my man-beloved
kuRippinRit – without notice
tummalpOl tOnRi viDum – just how sneeze bursts, it appears.

The maiden is advised that though there may be lust to be with the loved man, females shall not exhibit that overtly. Maiden answers thus: “though I try hard to hide the lust in me to be with my beloved, it somehow appears like how sneeze bursts without notice and uncontrollably!”

“However much I try to hide my lust for my beloved
Uncontrollably, it appears like sneeze, unannounced”

இன்றெனது குறள்:

காமம் ஒளிக்க முயன்றாலும் தும்மல்போல்
தாமது தோன்றும்கட் டற்று

kAmam oLikka muyanRAlum tummalpOl
tAmadu tOnRumkaT TaRRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment