குறளின் குரல் – 1269

10th Oct, 2015

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன்.
                            (குறள் 1263: அவாவயின்விதும்பல் அதிகாரம்)

உரன் நசைஇ – வெற்றியை விரும்பி
உள்ளம் துணையாகச் – தம் ஊக்கமே துணையாய் கொண்டு (என் துணையைத் புறந்தள்ளி)
சென்றார் – அவரோ சென்றுவிட்டார்.
வரல் நசைஇ – அவர் வரும் நாளில் விருப்புகொண்டு
இன்னும் உளேன் – இங்கு நானும் உயிருடன் உள்ளேன்

அவர் வெற்றியை விரும்பி, தன் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்று விட்டார். நானோ அவர் திரும்பி வருவதை விரும்பி இங்கு இன்னும் உயிர் வாழ்கிறேன் என்கிறாள் காதற்தலைவி, இக்குறளில்! இதில் தலைவி என் துணையைப் புறம் தள்ளி தன்னுடைய ஊக்கத்தைத் துணைகொண்டு தலைவன் சென்றதை வருத்தமுடன் சொன்னாலும், அதிலும் தலைவன் வெற்றியையே தேடிச் சென்றிருப்பதன் பெருமையும் ஒலிக்கிறது. அதேபோல், அவள் தனது உள்ளக் கிடக்கையான, தலைவன் தன் வெற்றியையும் கருதாது, தன்னிடம் வந்து அணைதலை விரும்புகிறாள் என்றும், அதற்காகவே உயிர் வாழ்கிறாள் என்பதும் தெரிகிறது.

Transliteration:

Urannasaii uLLam tuNaiyAkach chenRAr
Varalnasaii innum uLEn

Uran nasaii – desiring success in his pursuit
uLLam tuNaiyAkach – having his zeal as companion (not desiring my company)
chenRAr – he left me
Varal nasaii – desiring his coming
innum uLEn – I keep myself alive

He has left desiring and seeking success, with zeal as his companion. Here, desiring his coming back, I still keep myself alive, says the maiden in this verse. There is subtle suggestion of complaining tone that her beloved values his zeals’ companionship more than hers; however there is tone of pride about his pursuing success, implied. She also expresses that he should come back to her not even putting his success ahead of her desire.

He has left desiring success in his pursuit, with zeal to his side
Here, I keep alive myself, desiring for his return, ignoring pride”

இன்றெனது குறள்:

வெற்றி விழைந்தூக்கம் தந்துணையாய் சென்றவர்தம்
பற்றில் வழிபார்த்து நான்

veRRi vizhaidUkkam tanthuNaiyAi senRavartam
paRRil vazhipArttu nAn

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment