குறளின் குரல் – 1294

4th Nov, 2015

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் 
கள்ளற்றே கள்வநின் மார்பு.
                                  (குறள் 1288: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

இளித்தக்க – இழிவைத் தரக்கூடிய
இன்னா செயினும் – துன்பமே செய்தாலும் (கள்ளருந்துதல்)
களித்தார்க்குக் – கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு
கள்ளற்றே – கள் போன்றதே
கள்வ – வஞ்சகத் தலைவரே (அல்லது தலைவியின் உள்ளத்தைத் திருடியவரே)
நின் மார்பு – உன்னுடைய மார்பு

கள்ளானது உண்பவர்க்கு களிப்பைத் தருமாம்! அது எவ்வாறு என்பது இறைவனுக்கே வெளிச்சம். ஒருவேளை கவலைகளை தற்காலிகமாகவாவது மறந்து, தன் சுயமிழந்து இருக்கும் நேரத்தையே களிப்பான நேரமென்று கொள்வதாலோ என்னவோ!

அது ஒருவருக்கு இழிவையும், நீடுவரும் துன்பத்தையும் தருமென்றாலும், அருந்தியவர்க்கு களிப்பே தருவதுபோல்தான், வஞ்சகத் தலைவரே, உன்மார்பில் முயங்கியபின் வரப்போகும் பிரிவால் அவளுக்கு இழிவும், துன்பமுமே வரினும், அவளுக்கென்னவோ உன்மார்பைச் சென்றணைவதே விருப்பாயிருக்கிறது, என்று தோழி தலைவனிடம் கூறுகிறாளாம்.

Transliteration:

iLittakka innA seyinum kaLittArkkuk
kaLLaRRE kaLvanin mArbu

iLittakka – Though it will bring shame
innA seyinum – and cause ensuing misery
kaLittArkkuk – those who enjoyed (toddy)
kaLLaRRE – like how toddy is
kaLva – oh! Robber of her heart
nin mArbu – your chest.

It is said that toddy gives elation to those that drink! Only God knows how! Perhaps it gives a temporary break from worries to someone while being immersed in the intoxicated state and not being self-aware or being semi-self-aware. Though it brings only shame and misery for longtime, O! Robber of her heart, being in your embrace of your chest, is as pleasurable to her as toddy drinking is to someone who finds pleasure in that – says, the maidens’ friend to the man of maidens’ heart.

Though brings shame and misery, like how it is for those that rejoice
drinking toddy, O! Robber of her heart, to be in your chests’ embrace”

இன்றெனது குறள்(கள்):

களித்தார்க் கிழிவொடு துன்புறினும் கள்ளே
அளிந்தார்க்கு வஞ்சநும் மார்பு 

kaLittArk kizhivoDu tunbuRinum kaLLE
aLindArkku vanjanum mArbu

கள்ளால் இழிவொடு துன்புறினும் நும்மார்பை
கொள்வரின்புற் றாரது போல்

kaLLal izhivoDu tunbuRinum nummArbai
koLvarinbu Raradu pOl

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment