குறளின் குரல் -1299

9th Nov, 2015

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ 
பெட்டாங்கு அவர்பின் செலல்.
                                        (குறள் 1293: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

கெட்டார்க்கு – அழிவுறுகிறவர்களுக்கு
நட்டார் இல் – நண்பர்கள் இருக்கமாட்டார்கள்
என்பதோ நெஞ்சே நீ – என்பதாலோ நெஞ்சமே நீ
பெட்டாங்கு – விரும்பி
அவர்பின் செலல் – அவர் பின்பாக செல்கின்றாய்?

அழிவின் விளிம்பில் இருப்பவர்களுக்கு நண்பர்கள்கூட இருக்கமாட்டார்கள் என்பதாலோ, என் நெஞ்சமே, நீ விரும்பி அவர்பின் செல்கின்றாய்? என்று தன்னைப் பிரிந்து சென்றதால் அவர் அழிந்துபடுவார் என்றும், அதனால் அவர்க்கு நண்பர்களே இருக்கமாட்டார்கள் என்றும் உணர்த்துகிறாள். ஆயினும் அவள் உள்ளம் அவர்பால் ஈர்க்கப்படுவதை உணர்ந்து அதைக் கண்டிக்கிறாள் இவ்வாறு..

அகநானூற்று வரிகள் (71:1-3), “பயனின்மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல்” என்று கூறுவதும், வளையாபதி வரிகள், “விழுமிய ரேனும் வெறுக்க யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போல்” என்று கூறுவதும், கெட்டார்க்கு நண்பர்கள் இல்லை என்பதைதான்.

Transliteration:

keTTArkku naTTAril enbadO nenchEnI
peTTAngu avarpin selal

keTTArkku – Those who are in for ruin
naTTAr il – there will be no friends
enbadO nenchE nI – is what why, O! my heart?
peTTAngu – desiring
avarpin selal – you went behind him?

Those who are in the verge of destruction, ruin, would not have friends at all! Is that why you want to show solidarity and desiring to be with, go behind him? O! my heart! – The maiden rebukes her heart, realizing despite his leaving her and going away, her heart is drawn towards him.

This verse is based on an adage that is in vogue, “keTTArkku naTTar il” and has been used in many literary works, mostly in direct context, not as a similie.

“It is said that, friends none for that in ruin. 
Is that why, in desire, behind him you run?

இன்றெனது குறள்:

அழிந்தார்கு நண்பரில்லை என்றோ விரும்பி
ஒழிந்தாய்நெஞ் சேயவர் பின்?

azhindArkku naNbarillai enRO virumbi
ozindAinen cEyavar pin?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment