குறளின் குரல் – 1301

11th Nov, 2015

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் 
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
                                        (குறள் 1295: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

பெறாஅமை அஞ்சும் – காதலந்தன் கலவியைப் பெறாததற்கும் அஞ்சும் அவள் மனது
பெறின் பிரிவு அஞ்சும் – அதைப் பெற்றுவிட்டாலோ நீங்கிவிடுவானே என்றும் அஞ்சும்
அறாஅ இடும்பைத்து – இவ்வாறு இடையறாத துன்பத்தை தன்னிடம் உடைத்து
என் நெஞ்சு – என்னுடைய மனம்.

காதற்பெண்ணின் உள்ளம் எப்போதும் இடையறாத துன்பத்திலேயே உள்ளது. அவள் தன்நெஞ்சோடு இவ்வாறு புலக்கிறாள்; அவர் வந்து கலவியின்பம் தருவதை நான் பெறாவிட்டாலும் எங்கே என்னை வெறுத்தாரோ என்று என்மனம் அஞ்சும்; வந்து அவ்வண்ணம் நிகழ்ந்தாலோ, விரைவில் பிரிந்துவிடுவாரே என்று எண்ணியும் என்மனம் அஞ்சும்; இவ்விரண்டு நிலையே இருப்பதால், எப்போதும் மனம் இவ்வாறு இடையறாத துன்பத்தில் உள்ளதே என் நெஞ்சு என்று வருந்துகிறாள் அவள்.

Transliteration:

peRAamai anjum peRinpirivu anjum
aRAa iDumbaitthen nenju.

peRAamai anjum – For not gaining his embrace, will be fearful
peRin pirivu anjum – Even if I get his embrace, will be fearful
aRAa iDumbaitth(u) – So in permanent pain
en nenju – is my heart

The maidens’ heart is in perpetual pain; First she is fearful of not gaining the embrace of her beloved. Once she gains that, she is again fearful that it may not last as her beloved would probably leaver her soon; hence her heart regardless of being with him or not, is in incessant pain.

“Fearful, gaining not; Fearful even gaining it
Such is the incessant pain, she has in heart!”

இன்றெனது குறள்:

கூடல் பெறாளஞ்சும் பெற்றுமஞ்சும் நீங்காத
கேடதன் துன்புபோல் நெஞ்சு

kUDal peRALanjum peRRumanjum nIngAda
kEDadan tunbupOl nenju

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment