குறளின் குரல் – 1321

1st Dec, 2015

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள்.
                                      (குறள் 1315: புலவி நுணுக்கம் அதிகாரம்)

இம்மைப் பிறப்பில் – இப்பிறப்பிலே
பிரியலம் என்றேனாக் – நாம் பிரியமாட்டோம் என்றேன்
கண்நிறை – கண்களை நிறைத்து
நீர் கொண்டனள் – அவள் கண்களில் கண்ணீர் கொண்டாள்

நான் காதலியிடம், இப்பிறப்பில் நாம் பிரியவே மாட்டோம் என்று சொன்னேன், அன்பு மேலீட்டால். ஆனால் அவளோ, கண்களையே மறைக்கும் படியாக கண்ணீர் பெருக நின்றாள், நான் குறிப்பால் அடுத்தப்பிறப்பில் பிரிவோம் என்று பொருளுணர்த்தியதாக எண்ணி, என்று தலைவன் கூறுகிறான்.

Transliteration:

Immaip piRappil piriyalam enREnAk
kaNNiRai nIrkON DanaL

Immaip piRappil – In this birth
piriyalam enREnAk – I said we would not separate
kaNNiRai – for he eyes to brim with
nIr kONDanaL – had tears in her eyes

“I told my beloved that we would not separate in this birth, out of deep love; but she had eyes brimming with tears as if I was implying that we would separate in the next birth”, laments the man about her maiden flimsy reason for feeling sad.

“I told my beloved that we would not separate in this birth; 
her eyes brimmed with tears, as I implied that in next birth”

இன்றெனது குறள்:

பிரியோம்நாம் இப்பிறப்பி லென்றால் விழிநீர்
சொரிந்தாள் குறிப்பாய் நினைந்து

piriyOmnAm ippoRappi lenRAl vizhinIr
sorindAL kuRippAi ninaindu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment