குறளின் குரல் – 1328

8th Dec, 2015

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி 
வாடினும் பாடு பெறும்.
                        (குறள் 1322: ஊடலுவகை அதிகாரம்)

ஊடலின் தோன்றும் – ஊடலால் தோன்றுகின்ற
சிறு துனி – சிறிதளவு கோபத்தால், வெறுப்பினால்
நல் அளி வாடினும் – காதலருக்கிடைய உள்ள நல்ல அன்பானது தொய்ந்து போயினும்
பாடு பெறும் – அதுவும் வெற்றி பெறக்கூடியது.

சென்ற குறளின் தொடர்ச்சியாகவே இக்குறளைக் கொள்ளலாம். தோழி தலைவியை நோக்கி கேட்கிறாள், “ஊடலுக்குப் பின் இன்பம் வருமேயாயினும், ஊடலினால் சிறிது கோபமும், வெறுப்பும் தோன்றுமே” என்று! அதற்கு தலைவி, “உண்மையே! ஊடலினால் சிறிதளவு கோபமும், வெறுப்பும் தோன்றி, அதனால் காதலருக்கிடையே உள்ள நல்ல அன்பிற்கு தொய்வு உண்டாகும்; என்றாலும், அதுவும் வெற்றி பெறக்கூடியதே” என்கிறாள். மணக்குடவர் உரை மிகவும் அழகாக இதைச் சொல்லுகிறது. ஊடலின்கண் எதிர்த்து நில்லாத காதற்தலைவனே வென்றார்; அவ்வெற்றியை கூடலின் கண்ணே காணப்பெறும், என்கிறார் மணக்குடவர்

Transliteration:

UDalin thOnRum siRuduni nallaLi
vADinum pADu peRum

UDalin thOnRum – that which is brought forth by the love quarrel
siRu duni – a little disgust, anger
nal aLi vADinum – though the affection takes a back seat between the lovers
pADu peRum – even that yields more affection and the success of union

This verse can be considered the continuation of the previous verse. The friend of maiden asks, “ though pleasure of union is there after the love-quarrel, won’t it bring a little disgust and anger” for her man-love. The maiden answers thus: “True! The love-quarrel would yield anger and disgust, though it would also be a success for my man eventually”. ManakkuDavars’ commentary has put this nicely; The man who did not figh against the love-quarrely, had the success and the fruit of that was seen in the subsequent union between the man and his maiden”

“Though the affection takes a small hit, because of the love quarrel,
   It would only yield success to him eventually, as the love will swell”

இன்றெனது குறள்:

காதலர் அன்புதொய்தும் சீர்பெறும் ஊடலின்
மோதல்கண் தோன்றும் வெறுப்பு

kAdalar anbuthoidum sIrpeRum UDalin
mOdalkaN thOnRum veRuppu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment