Monthly Archives: June 2020

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 895

895. யோநிநிலயா ( योनिनिलया – பிரபஞ்சமனைத்திற்கும், தோற்றுவாயாகவும், நிலையாகவும் இருப்பவள் ) பிரளயத்தில் அனைத்தும் அன்னையிடம் ஒடுக்கமாவதால், அவளே பிரபஞ்சத்தின் நிலையமாக இருக்கிறாள். பிறகு எல்லாமே மீண்டும் அவளிடமிருந்தே தோன்றுவதால் அவளே பிரபஞ்சத்திற்கு யோநியாகவும் இருக்கிறாள். யோநி என்பது பிறப்பிடத்தையும், நிலயம் என்பது ஒடுங்கும் இடத்தையும் குறிப்பன. யோநி என்பது ஶ்ரீசக்கரத்தில் ஒன்பதாவது ஆவரணமாகிய … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 894

894. அயோநி: ( अयोनिः – எதனின்றும் உண்டாகாதவள் ) ப்ரபஞ்சத்தில் அனைத்திற்கும் அன்னையே ஆதிகாரணமாக இருப்பதால் அவளுக்கென்று ஏதொரு காரணமும் இல்லை என்பதே இந்நாமத்தின் கருத்து. யோனி என்பது ஸ்தானத்தைக் குறிப்பதாம். அயோநி: என்றதால், அத்தகைய ஸ்தானமில்லாதவள் என்றாகும். அல்லது விஷ்ணுவின் தாயாரென்றும் கூறலாம். தோன்று மனைத்தையும் தோற்றுவிக்கும் தேவியன்னை தோன்றா அயோனியாம் தொன்மையள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 893

893. விஷ்ணுரூபிணி ( विष्णुरूपिणी – விஷ்ணுவின்வடிவாகவேஇருப்பவள் ) காக்கும் தொழிலுடையோன் விஷ்ணுவாகவும் தோன்றியவள் அன்னையே. அம்பிகையும் நாராயணனும் அபேதமென்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. கோபிகைகளை மோஹிக்கச் செய்த க்ருஷ்ண ரூபமானது தன்னுடைய புருஷ ரூபமாக லலிதோபாக்யானத்தில் அம்பிகையின் கூற்றாகவே சொல்லப்படுகிறது. அன்னையே பெண் வடிவில் லலிதாம்பிகையாகவும், புருஷ வடிவில் நாராயணனாகவும் தோன்றியவள். மாலோன் வடிவினளே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 892

892. வைஷ்ணவீ ( वैष्णवी – விஷ்ணுவின்ஶக்திவடிவாயிருப்பவள் ) விஷ்ணுவின் ஶக்தி உருவானவள் லக்ஷ்மீ தேவி. அவளின் வடிவாக பராஶக்தி இருக்கிறாள். அதைத்தவிர அன்னைக்கு விஷ்ணுவைப் போலவே ஶங்கம், சக்ர, கதாயுதங்களைத் தரிப்பதாலும், அவரைப் போன்று சத்ருக்களை ஸம்ஹாரம் செய்வதாலும், விஷ்ணுவின் ஸஹோதரியாக இருப்பதாலும், இன்னொருவிதமாக விஷ்ணுவுக்கு ஜனனியாக இருப்பதாலும் அவளுக்கு வைஷ்ணவீ என்று பெயர். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 891

891. வித்ருமாபா ( विद्रुमाभा – பவழம்போன்ற ஒளியை உடையவள் ) ஞானமாகிற விருக்ஷமாக இருப்பவள் அன்னை என்கிற பொருள் வரும்படியாக வித் + த்ரும: என்று பிரித்துப் படிக்கலாம். அல்லது வித்ரும ஆபா என்று பிரித்து பவழம் போன்ற நிறத்தை உடையவள். அன்னையின் சிவப்பு நிறம் மலர்களுக்கும் பவழத்துக்கும் ஒப்பாகச் சொல்லப்படும்.  மலர்களில் சிவப்பு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 890

890. விஶ்வக்ராஸா ( विश्वग्रासा – விஶ்வமாகிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடுபவள் ) பிரளயத்தில் அசையும் அசையா அண்டங்கள் அனைத்தையும் அன்னையே விழுங்கிவிடுவதால் அன்னைக்கு ஏற்பட்ட பெயரிது; இது அண்டமனைத்தும் அவளும் ஒடுங்குவதைக் குறிப்பது. ஊழி யிலுலகெலாம் உண்டொடுக்கி ஊங்குவாள் பாழியஞ் சோதியள் பண்டையள் –  ஆழுமவை அத்தனையும் அன்னை அடிவயிற்றிற் போந்தவள் மித்தியா வித்தையாய் மிக்கு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 889

889. விஶ்வப்ரமணகாரிணீ ( विश्वभ्रमणकारिणी – பிரபஞ்சத்தில் இருக்கும் பேரண்டங்களை இயங்கச் செய்பவள் ) பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துணை அண்டங்களும், பேரண்டங்களும் உருவாகி, இருந்து, முடிவடையும்வரை அவற்றைச் சுழல் வைத்து, இயக்குபவள் அன்னையே. இத்தனை அண்டங்களும் தோன்றிச் சீராக இயங்குவதற்கு அன்னையின் அருட்சக்தியால் மட்டும்தான். விஶ்வம் என்பதை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்படி விஷ்ணு என்றுகொண்டால், விஷ்ணுவை ஸமுத்திரச் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 888

888.  விப்ரரூபா ( विप्ररूपा – வேதியர்வடிவினளாகவேஇருப்பவள் ) மேலே சொன்ன விப்ரராம் வேதமோதி, அதன்படி வாழ்வை நடத்தும் அந்தணரின் வடிவாகவே இருப்பவள் அன்னை. தவிரவும் விப்ரர்களை நல்ல தேசுடையவராகவும் ஆக்குகிறாள் அன்னை. அந்தணர் ஓதும் வேதத்தாலும், அவர்களது ஜப-தபங்களாலும் அவர்களுக்கு தேசு கூடுவதற்கும் அன்னையே தன்னருளால் காரணமாயிருக்கிறாள் வேதவழி வாழுகின்ற வேதியர் தம்வடிவில் ஞாதமாய் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 887

887. விப்ரப்ரியா ( विप्रप्रिया – வேதியரிடத்தில்பிரியமுள்ளவள் ) பிறப்பினால் அந்தண குலத்தவனாயினும், அக்குலத்துக்குரிய தூய வாழ்க்கை வாழ்பவரே துவிஜர்கள். வேதத்தை ஓதுவதும், அதன்படி வாழ்வதும் அவரை விப்ரர்களாக ஆக்குகிறது. இம்மூன்றும் நிறைந்தவரே ஶ்ரோத்ரியர். அத்தகைய விப்ரரிடம் அன்னை பிரியமாய் இருக்கிறாள். அத்தகு வேதியரும் தம்முடைய ஆத்மாவாக இருக்கும் அன்னையின் கழலிணைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருப்பார். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 886

886. தனதான்யவிவர்த்தினீ ( धनधान्यविवर्धिनी – தனம், தான்யங்களைதன்பக்தர்களுக்குப்பெருகும்படிச்செய்பவள் ) அளவிறந்த செல்வமிருந்தும் சிலருக்கு உணவுக்கான பாக்கியமிராது. தெய்வ அனுக்ரஹமில்லாமையே அதற்குக் காரணம். அவர்களது செல்வம் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில், வேண்டிய விதத்தில் பயன்படவில்லை. அன்னையின் அருளிருந்தால் அனைத்தும் கூடி வரும். அவள் பக்தர்களுக்கும் தனம், தான்யம் இவற்றுக்குக் குறைவே இல்லை. தனத்தொடு தானியங்கள் தந்தருளி … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment