குறளின் குரல் – 35

May 14th, 2012
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
                                               (குறள் 24: நீத்தார் பெருமை அதிகாரம்)
Transliteration:
uranennum thOTTiyAn Oraindhum kAppAn
varannennum vaippiRkOr viththu.
uranennum – determination and steadfastness
thOTTiyAn –  is like the “ankus” an elephant goad  with the sharp spike and a hook
Oraindhum – the five senses (that need to be kept and under watch)
kAppAn –can keep under control (one who)
varan ennum – the best boon to  get
vaippiRkOr – the heavenly state of oneness with godhead (realized state of bliss)
viththu – seed.

While reading this verse, some will get the doubt as to who are being referred to as “renounced”!  Those who have conquered the five senses must be already renounced ones. It is assured that they will get to the blissful heavenly abode. For common people, the control of sense is difficult and not possible always.
More than speaking about the greatness of such “renounced” beings, the verse hints at the end goal and purpose of such renunciation and self control to conquer the senses.  Once somebody reaches that elevated state, even the high abode can not be the desire as the person has reached the pinnacle of desirefree state.
For the “glorified renounce state”, five senses must be in control to quell the desires through them. The elephants of size and power that they are, it is difficult to control them, but for the small implement called “ankuSA”, not by just anyone, but the one who has trained to do that. The word “thOTTiyAn” refers both to “ankuSA” and the “mahout”, the elephant trainer and controller. 
The implement that can control the five senses that are like elephants, big, wild and powerful is made out of ones determination and resolve. But to be able to have that determination and resolve, one must train in austere path and practice, which is what is implied by the word”thOTTiyAn” in my humble opinion.
The word “viththu” or seed is said because they will be sprout in the land of heavenly above not back on this earth. Somehow, whenever I read about this utopian heavenly abode, I am reminded of other shore being green for the eyes.  Only a defeatist’s attitude thinks that what he have is not good and something out there in places we can’t see, there is permanent good! Hmm!.. How could we argue such a position?
“Conquerors of five senses, assured seeds of of heavenly abode
 For they know with determination and resolve how to ride”

உரனென்னும்  –  உறுதி, திண்மை (புலன்களை அடக்கியிருக்கவேண்டுமென்கிற)
தோட்டியான்  –   அங்குசத்தால் (உறுதி என்கிற அங்குசம் – உருவகம்), அங்குசத்தை வைத்திருக்ககூடிய பாகன்
ஓரைந்தும் – ஐம்புலன்களின் அவாக்கள் (காத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியவை)
காப்பான்– தன்னுடைய கட்டுப்பாட்டினுள்ளே வைத்திருப்பவன்
வரனென்னும் –  கிடைத்தற்கரிய வரம் என்று சொல்லக்கூடிய
வைப்பிற்கோர் – இடங்களில் சிறந்ததாகக் கருதப்படும் வீடு அல்லது மோட்சத்திற்கு (பேரின்பப் பெருவீடு)
வித்து –  விதையாகும் (மீண்டும்  பூமியில் பிறவாது, பேரின்ப வீட்டில் சென்று முளைத்தலால்)

இக்குறளைப் படிக்கும் போது, துறந்தார், நீத்தார் என்ற சொற்கள் யாரைக் குறிக்கின்றன என்கிற சந்தேகம் எழக்கூடும். முற்றிலும் துறந்தவர்கள், ஐம்புலன்களின் விருப்பங்களையும் வென்றவர்களாகக், கடந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு பேரின்பப்பெருவீடு கிடைப்பது உறுதியே.  பூமியின்கண் சாதாரண மக்களுக்கு, புலனடக்கம் என்பது எப்போதும் அவரவர் கட்டுப்பாட்டிலே இருக்குமென்பது இயலாதவொன்று.
இக்குறள் துறந்தாரின் பெருமையைக் கூறுவதைவிட, துறப்பதினால் கிடைக்கக்கூடிய இறுதிப்பயனைக் (பேரின்ப வீட்டுப் பேற்றினை அடைதல்) கூறுதலால்,  இது எல்லோருக்கும் சொல்லப்பட்டதாகக் கருதப்படலாம். பயன் கருதாக் கடமையே, எல்லாமற தன்னை இழந்த நலமே துறவு நிலை. அவர்களுக்கு மோட்சம், வீடு என்கிற குறிக்கோளுமே கூட இராது.
துறவு நிலையை அடைய ஐம்புலன் அவாவை அறுத்தல் வேண்டும். ஐம்புலன்களும் யானைகளைப் போன்று பெரிதும், கட்டில் அடங்குவதற்கு கடினமானவையும் ஆகும். ஆனால் அங்குசம் என்கிற சிறு ஆயுதமே அவற்றை அடக்கி கட்டிற்குள் வைத்திருக்க வல்லது. அதேபோல் மனத்திண்மை, உறுதியென்கிற ஆயுதத்தால் ஐம்புலன்களை கட்டிற்குள் வைக்கமுடியும் என்பதை அறியமுடிகிறது.
வெறும் ஆயுதத்தால் மட்டுமே அடங்ககூடியவையல்ல எவையும். ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அவற்றை அங்குசம் கொண்டு அடக்கமுடியும். அதனாலே “தோட்டியான்” என்பதை “அங்குசத்தால்” என்பதை விட, பாகனை என்று குறிப்பதாகவும் கொள்ளலாம். 
புலனடக்கம் என்கிற செயல் திண்மை, உறுதி என்கிற அங்குசத்தால், அவற்றை பயனாக்கம் செய்யத்தெரிந்த, அதற்கான பயிற்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே முடியுமாதலால், துறவு நிலையிலிருப்பதற்கான மனப் பயிற்சிகளையும் இங்கே அடிக்கோடிட்டிருப்பதும் தெரிகிறது.
வித்து என்றது, பூமியில் பிறவாது, மீண்டும் மோட்சமாகிய வீட்டிலே முளைப்பதால். ஆனால் இந்த எண்ணம் என்னவோ தோல்வி மனப்பான்மையின் உச்சமாகத்தான்,  “அக்கரைப் எப்போதுமே பச்சை” யாகத்தான் படுகிறது. புலனடகத்தை வலியுறுத்துவதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் “அக்கரைதான் பச்சை” என்பது வடிகட்டிய அபத்த வாதம். சமயவாதிகளின் ஒருசார் சிந்தனைக் கருத்துகளுக்கு, வாதங்களுக்கு, பிடிவாதங்களுக்கு, எதிர்வாதம்தான் ஏது?
இன்றெனது குறள்:
ஐம்புலனைத் திண்மையாம் அங்குசத்தால் வென்றாரே
மெய்ப்புலமாம் வீடதற்கு வித்து.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment