குறளின் குரல் – 359

6th April 2013
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
                         (குறள் 350: துறவு அதிகாரம்)
Transliteration:
paRRuga paRRaRRAn paRRinai appaRRaip
paRRuga paRRu viDaRku
paRRuga – Cling to or Hold on to or be attached to (to be devoid of attachments)
paRRaRRAn – One who is devoid of attachments (Godhead)
paRRinai – and be attached to him only
appaRRaip – even that attachment towards that Godhead devoid of attachments
paRRuga –  one must hold or cling to or have
paRRu viDaRku – to keep as a guide to leave attachments in worldly lures.
In the fourth verse of first chapter on Invoking Gods, in ThirukkuraL, vaLLuvar would have called the omniscient as “vENDudhal vENDAmai ilAn”, describing his state as not having desires or aversions for anything. The same is denoted by one word “paRRaRRAn” in this verse.  The only attachment one can have is the attachment on the ominscient who is free of  attachments of desires or aversions. When a person clings to that attachment towards omniscient, then a persons’ attachments towards other worldly lures are set free and the person becomes detached.

A line from Thirumandhiram says, if you have to cling to any desire let it be the desire on omniscient. (paRRadhu paRRil paramanaip paRRumin). Sambandar thEvAram has many lines in different verses where he addresses Ishwara as “paRRAn”.
vaLLuvar has lost himself in the play of words in this verse. To express and emphasize detachment, he has used  set all words starting with “paRRu” root, with lips touching (attached to each other) except the last word. Perhaps he has shown indirectly how painful the attachements become.The words, when said consequtively pose considerable difficulty because, for each word, the lips stick together and detach. In the new verse today, I have employed a straight forward technique of using words, where none of them allow the lips to join. The verse naturally suggests detachment, a different thought to show that detatchment need not be painful and difficult.
“Cling to the One who has attachments none, as an attachment
 For that attachment is a must, to cling to attain detachment”
தமிழிலே:
பற்றுக – (பற்றை அறுக்கவேண்டுமாயின் ) பற்றிக்கொள்க
பற்றற்றான் – வேண்டுதல் வேண்டாமை இலானை (நினைவு கொள்க வேண்டுதல் வேண்டாமை இலானடி)
பற்றினை – அவன்மேல் மட்டும் பற்று கொள்க
அப்பற்றைப் – அவன்மேல் கொள்ளும் அப்பற்றையும்
பற்றுக – பற்றிக்கொள்ளுக
பற்று விடற்கு – பற்றென்னும் நிலையாமையை துறப்பதற்கு
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பையில என்று பாயிர இயல், கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் நான்காவது குறளில் சொல்லிய வள்ளுவர் அதே கருத்தையொட்டியே அவனையே பற்றிலான் என்று கூறி, அவன் மேலாய பற்றினைப் பற்றிக்கொள்ளச் சொல்லுகிறார். ஏன் அவன் மீது பற்றுக்கொள்ளவேண்டும்? அவனைப்பற்றிக்கொண்டால் மற்ற உலகியல் பற்றுகளெல்லாம் அற்றுவிடும் என்பதால்.
திருமந்திரப்பாடல் வரியொன்று, “பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்” என்கிறது.  சம்பந்தர் தேவார வரிகள், “காழி அமர்கோயில் பற்றானைப் பற்றி நின்றார்க்கில்லைப் பாவமே” என்றும், “ கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினைப் பற்றாவே” என்றும் ஆண்டவனை பற்றிலானாகவும், அவனைப் பற்றுவதே பற்றற ஒரே வழியென்றும் சொல்கின்றன.
வள்ளுவரும் சொற்சிலம்பங்களிலே தன்னை இழந்து படைத்த குறள்களில் ஒன்றிது. தவிரவும் ஈற்றுச் சீர் நீங்கலாக எல்லா சீர்களும் உதடுகள் ஒற்றி ஒலித்து பற்றின் கடினத்தை உணர்த்துகின்றன.  உதடுகளும் பற்றிக்கொள்ளாமல் இக்குறளின் கருத்தையொட்டிய குறள் கீழே. இக்குறளில் ஆசையில் என்ற சொல இரு முறை வருகிறது. முதலடியில் வரும் “ஆசையில்”, “ஆசை + இல்” என்றும், இரண்டாம் வரியில் வருவதை வருகின்றபடியேயும் படிக்கவேண்டும். முதலடியில் வரும் ஈற்றுச் சீர், “ஆசையால்” என்பது அவ்வாறு ஆண்டவன்மேல் கொள்ளும் ஆசையால் என்று பொருள்பட வரும்.
ஆசையில் ஆண்டவனில் ஆசைகொள்க ஆசையால்
ஆசையில் ஆசை அற (முதற்சீர் ஆசையில் – ஆசை + இல்)
Asaiyil ANDavanil AsaikoLvIr AsaiyAl
Asaiyil Asai aRa

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

1 Response to குறளின் குரல் – 359

  1. KR Raman says:

    Dear Sir,
    Can you please give me the reference to the following குறள் you have quoted in your Post# 359
    ஆசையில் ஆண்டவனில் ஆசைகொள்க ஆசையால் ஆசையில் ஆசை அற
    Thanks and regards

Leave a comment