குறளின் குரல் – 358

5th April 2013
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
                         (குறள் 349: துறவு அதிகாரம்)
Transliteration:
paRRaRa kaNNE piRappaRukkum maRRu
nillaiyAmai kANap paDum
paRRaRa kaNNE – Only for those who have renounced all attachments
piRappaRukkum – the cycle of birth and death will be quelled
maRRu – for others
nillaiyAmai – the impermanence due to the cycle of birth and death
kANappaDum – will only be seen again and again.
Who is devoid of attachments will severe the tie of another birth!
Being not so, will keep the impermanence of life back and forth.
This verse is another verse where the same theme of impermanence of life, back and forth for those who do not get the attachments quelled is explored. Here the birth is equated to impermanence, because whatever is born must die to be born again if the desires and attachments are not given up during the given birth.
By citing the impermanence, the renounced are reminded and nudged to be devoid of attachments. The essence is that as long as a person does not cling to the “detached demeanor”, the impermanence of this pitiful, arduous life will cling to him.
In the verse from “aRaneRich chAram”, the poet munaippADiyAr says, “ paRRinmai OTTuvAnuyndhu pOvAn”, meaning, one who clings to detachment he will reach the heavenly abode.
Another way to interpret the same verse is based on two words “kaNNE” and “pArkkappaDum” in the verse, both have to do with the “sight”. Because the eye sees, it succumbs to desires and attachments. The eye that does develop the attachement is the one which severes the cycle of birth and death. When the eye is set on impermanent worldly objects, then attachment develops which leads to impermanence. This may be to stress the importance of detachment to ascetics’ sight!
தமிழிலே:
பற்றற்ற கண்ணே – எவருக்கு எல்லாப்பற்றுகளும் அற்றுவிட்டனவோ
பிறப்பறுக்கும் – அவருக்கு அப்பற்றற்ற தன்மையே அவருக்கு மீண்டும் பிறப்பெனும் துன்பத்தை அறுக்கும்
மற்று – அவ்வாறு பற்று அறாதத் தன்மை உடையவர்களுக்கு
நிலையாமை – நிலையாமையாம் இப்பிறந்திறக்கும்
நிலைமையே
காணப்படும் – இருக்கும், பார்க்கப்படும்
இந்த குறள், மீண்டும் பிறப்பின், வாழ்வின் நிலையாமையை உலகியல் பற்றுகளின் வெளிப்பாடாகக் காட்டி, பற்றுகளைத் துறக்கவேண்டியதை வலியுறுத்துகிறது. பிறப்பே நிலையாமையாகும். ஏனெனில் பிறப்பதெல்லாம் இறக்க வேண்டும், மீண்டும் பிறக்கவேண்டும், இந்த சுழற்சி, பற்றுகளை கிடைத்திருக்கும் பிறப்பிலேயே முழுவதுமாக விட்டுவிடாத வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இந்த நிலையாமையைக் கூறி, துறந்தோருக்கு நினைவுறுத்தி, அவர்களை பற்றற்றத் தன்மைக்குச் செல்லும்படி நடத்துகிறது. பிறப்பை அறுக்கின்ற பற்றின்மை என்ற ஒன்றை பற்றிக்கொள்ளாதவரை (பற்றின்மையே பற்றிக்கொள்ளத்தக்க பற்று), உறவாகப் பற்றிக்கொள்ளும், நிலையில்லாமையாகிய துன்பமாகிய நிலைமை.
அறநெறிப்பாடலில் வீட்டினையுறுவான் இயல்புபற்றி கூறும் பாடலில், “பற்றின்மை ஓட்டுவானுய்ந்துபோவான்” என்பார், முனைப்பாடியார். மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன் வீட்டுப்பேற்றினை அடைவான் என்பதே இதன் பொருள். சைவ ஞானிகள், சிவபெருமானை பிறப்பறுக்கும் பேராளனாக உருவகம் செய்திருக்கிறார்கள். திருவாசகத்தின்கண் வரும் சிவபுராணத்தில் சிவபெருமானை ‘பிறப்பறுக்கும் பிஞ்சகன்” என்றும், “மாயப் பிறப்பறுக்கு மன்னன்” , “பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” என்றும் மாணிக்கவாசகர் கூறுவார்.
சற்றே கூர்ந்து நோக்கினால், வள்ளுவர் “கண்ணே” என்றும், பின்னர் “பார்க்கப்படும்” என்றும் சொல்லியிருப்பதால் இப்படியும் பொருள்கொள்ளலாம்: கண் பார்ப்பதில்தான் அவா கொள்ளுகிறது; அவா பற்றாகப் பற்றிக்கொள்கிறது. அவ்வாறு பற்றினைக் கொள்ளாத கண்ணே பிறப்பறுக்கும் கருவியாம். மற்றபடி அவா வழி செல்லும் கண்கள் காண்பது நிலையாதனவான பொருள்களைத்தான். துறவிகளின் பார்வை பற்றற்றதாக இருக்கவேண்டியதைச் சொல்வதாகவும் கொள்ளலாம்.
இன்றெனது குறள்:
பிறப்பறுக்கும் பற்றின்மை பற்றார்க்குப் பற்றும்
உறவாய் நிலையில் நிலை
piRappaRukkum paRRinmai paRRArkkup paRRum
uRavAy nilayil nilai
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
பார்வையிலேயே பற்றறுக்க  வேண்டுமென்பதை வலியுறுத்தி மற்றுமொரு குறள்
பற்றறுக்கப் பார்வையில் பற்றா பிறப்பென்றும்
மற்றோர்க்கு மீண்டும் பிறப்பு
paRRaRukkap pArvaiyil paRRA piRappenRum
maRROrkku mINDum piRappu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment