குறளின் குரல் – 357

4th April 2013
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
                         (குறள் 348: துறவு அதிகாரம்)
Transliteration:
thalaippaTTArWill attain the heaveny abode, higher status
thIrath thuRandhAr – those who have renounced, relinquised attachments completely
mayangiwith the senses not in control
valaippaTTAr –  caught in the illusory web of life
maRRaiyaavar – others
Those who renounce completely all desires and attachments are the only ones that will attain the heavenly abode. Others will be caught in the illusory web of life and the attachments to desires.. Even if there lingers one desire, they will multiply and completely stray the person deviant from the ascetic path. The word “thalaippaTTAr” does not directly mean, it is the heavenly abode, that completely renounced will attain. Most commentators have given a surmised meaning of heavenly abode. A simple interpretation of the word means, attaining higher status in life. This is again an oft repeated thought in these kuraL.
தமிழிலே:
தலைப்பட்டார் வீட்டுப் பேற்றினை, முத்தியை அடைவார்
தீரத் துறந்தார் – ஆசைகளை முற்றிலுமாக துறந்தவர்கள்
மயங்கிஅறிவு மயங்கி
வலைப்பட்டார்வாழ்வெனும் மாய வலையில் அகப்பட்டுக்கொண்டவர்
மற்றையவர் மற்றவர்கள் எல்லாம்
ஆசைகளை முற்றும் துறந்தவர்களே வீட்டுப்பேற்றாம் முத்தியை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களது அறிவானது மயங்கித் தடுமாறி வாழ்வென்னும் மாயவலைதனில் அகப்பட்டுக்கொண்டவர்கள் என்கிறது இக்குறள். முற்றும் துறக்காதவர்க்கு, ஏதேனும் ஒன்றன் மேல் பற்றிருக்க, ஒன்று பலவாகி துறவிலிருந்து முற்றிலும் விலக்கிச் சென்றுவிடும். தலைப்பட்டார் என்ற சொல்லுக்கு, உரையாசிரியர்கள் பலரும் முத்தி வீட்டைச் சேர்வது என்று பொருள் செய்துள்ளனர். இது கொண்டு கூட்டிக்கொண்ட பொருளே. உயர்ந்த இடம் என்ற பொருளும் தலைப்படுதலுக்கு ஏற்ப வரும். மீண்டும், முன்னரே சொல்லியிருக்கிற கருத்துதான் இது.
இன்றெனது குறள்:
முற்றுந் துறந்தார்க்கே முத்தி அறியாமை
பற்றுவலைப் பட்டார் பிறர்
muRRun thuRandhArkkE mukthi aRiyAmai
paRRuvalaip paTTAr piRar

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment