குறளின் குரல் – 356

3rd April 2013
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
                         (குறள் 347: துறவு அதிகாரம்)
Transliteration:
paRRi viDAa iDumbaigaL paRRinaip
paRRi viDaa dhavarkku
paRRiviDAa – will not grab
iDumbaigaL – pains of miseries
paRRinaip – the attachment on life as well as object in this world
paRRiviDAdhavarkku – one who deos have them
Though this verse, says that those who are immersed neck deep in attachments and cannot detach themselves from them, will have grief of painful consequences, clinging and following them always. Another way to interpret this verse would be to think that no grief clings to a person that will not cling to attachments. “paRRi viDA” means “clinging without leaving”; “paRRiviDA” without that space in between would mean, “does not cling” . We need to keep this subtle difference while reading this verse.
Sambandars’ thEvAram, lists the attachments as those with parents, offsprings and wife and those who do not have these attachments leave them, will not have salvation. Though this thEvAram says family relationships as “attachments” to be rid of, an ascetic pursuant must leave familial and material attachments for their salvation
“To those who cling to attachments, grief
 Will cling to to them, not leaving their life”
தமிழிலே:
பற்றிவிடா – சேராது
இடும்பைகள் – துன்பங்கள்
பற்றினைப் – உலகத்தில் உயிர், மற்று பொருள்களிந் மேல் பற்றினைக்
பற்றிவிடாதவர்க்கு. – கொள்ளாதவர்களுக்கு
இக்குறளைப் பொருத்தவரை, பற்றுகளில் அமிழ்ந்து அவற்றைப் பற்றிக்கொண்டு விடாதவர்களை, துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாமல் தொடரும் என்று பொருள் கொள்வதும் மிகவும் பொருந்துகிறது, என்றாலும், “பற்றுகள் இல்லாதவரை எந்தவொரு துன்பங்களும் சேருவதில்லை என்றும் கொள்ளலாம். “பற்றி விடா “ என்பது பற்றிக்கொண்டு விடாமலிருப்பதையும், “பற்றிவிடா” என்பது, “பற்றுவதில்லை” என்பதையும் குறிப்பதைக் கருத்தில் கொண்டு இக்குறளைப் படிக்கவும்.
சம்பந்தரின் ஆருர் தேவாரம் பற்றுகளை “தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர தாரமென்னும் பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே”என்று குடும்பத்து உறவுகளையே பற்று என்கிறது. உலக வாழ்வியலில் உறவுகள் மற்று வாழ்க்கை வசதிகள் இவற்றைத் துறப்பதே உண்மையான பற்றறுத்த துறவு நிலையாம்.
இன்றெனது குறள்:
பற்றுகள் பற்றார்க்கு பற்றாப் படுந்துன்பம்
முற்றும் துறந்ததி னால்
paRRugaL paRRArkku paRRAp paDunthunbam
muRRum thuRandhadhi nAl
The verse can also be interpreted to mean the following.
பற்றுகளில் பற்றறார்க்கு பற்றறாது பற்றிடுமே
முற்றிலும் மூழ்கச்செய் துன்பு
paRRugaLil paRRArkku paRRaRAdhu paRRiDumE
muRRilum mUzhgachei thunbu.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment