குறளின் குரல் – 33

May 11th, 2012


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
                                         (குறள் 21: நீத்தார் பெருமை அதிகாரம்)


Transliteration:
ozhukkaththu nIththAr perumai vizhuppaththu
vENDum panuval thuNivu

ozhukkaththu – treading the virtuous path (referring to the renounced beings that are epitome of high virtues)
nIththAr  – people (as in saints, sages, ascetics ) that have renounced all the earthly pleasures in pursuit of self realization
perumai  – the glory (of)
vizhuppaththu – the best among all the desirable things, attributes (of the renounced people)
vENDum – writte in, as the first and only thing to be desired,
panuval  – all the scriptures that define, codify the virtuous way of life
thuNivu –  say that in a definitive tone

We move to this new chapter of the celebrating the glory of ascetics that have renounced the worldly pleasures, with the  pursuit of a life of dedication to the betterment of the society at large; Ascetics renounce the world for self realization, realizing the Godhead in themselves, (inward seeking) and ultimately attaining godliness by their virtuous life.

The first verse says that, best of scriptures that extols the virtuous life, write foremost about the glory of ascetics that have stood by the austerities of virtusous path,  prescribed to them; to exemplify their renounced life and to show their sacrifice, penance and goodness that serve as the beacon for the society to function well. The usage of the word “panuval” is very clever of vaLLuvar as he clearly does not want to be boxed in any religio-factionism by identifying with a specific scripture.

Why should scriptures extol the glory of ascetics, the foremost? Scriptures serve as the manual of moral coduct of the society. Regardless of religious leaning, all scriptures of all religions fundamentally praise the values of sacrifice, service to humanity and such basic tenets of righteous life. So, coming from them has a better reach to the society to follow the examples of such noble souls and be good.

“Scripture extol the glory of the renounced as the best among
the many codes of conduct they preach good as their song”

தமிழிலே:
ஒழுக்கத்து  –  தமக்குரிய ஒழுக்கங்களின்று வழுவாது நிற்றல்
நீத்தார் – உலக ஆசைகளைத் துறந்தவர், இறை சிந்தனையும், சுய உணர்தலையும் நாடும் தவத்தோர்
பெருமை – அவர்தம் பெருமை, புகழ்
விழுப்பத்து – விரும்பிய பல பொருள்களிலும்
வேண்டும்  தேவையானது (விரும்பியவற்றில் முதன்மையாக)
பனுவல் – நீதி நெறி, சமய நெறி புகட்டும் நூல்கள்
துணிவு – முடிவு (முடிவாக, உறுதியாக, இறுதியாக, திட்டவட்டமாக கூறுகின்றன)

அடுத்த அதிகாரமான நீத்தார்பெருமை, உலகியலில் ஆசைகளைத் துறந்தி, புறகரணங்களால் விளையக்கூடிய பற்று மற்றும் அவா இவைகளை தவிர்த்து, விடுத்து, தவநெறி வாழ்பவர்களைப் பற்றியது.  தவத்தினர்களின் வாழ்வு சமூகத்தினர் வாழ்க்கைச் சிறப்பிற்காகவே இருக்கும். சுய தேடல், அறிதல், கடவுள் தன்மையை அகமுக நோக்கல், இறுதியில் கடவுள்தன்மையராகவே ஆகுதல், என்று, இவற்றுக்காகவே அவர்களது வாழ்வும் பயணமும்.

முதல் குறள், தங்களுக்குரிய ஒழுக்கமுறைகளில் வழுவாது, தவநெறி வாழ்க்கையில் அவா அறுத்து வாழக்கூடிய துறவிகள் பெருமையை, நல்ல நூல்கள் தாங்கள் பேசும் சிறப்புகளுக்கெல்லாம் முதன்மையாக வைத்துப் பேசவேண்டுமென்கிறது.

“பனுவல்” என்று பொதுவாகச் சொல்லி, எந்த வித சமயச் சச்சரவுகளுக்குள்ளும், சிக்காமல் எல்லா சமயநூல்களுக்கும், நீதிநெறி, அற நூல்களையும் பொதுவாக சொல்லிவிட்டார் வள்ளுவர்.

ஆமாம், எதற்காக பனுவல்கள் துறவியர் பெருமையை முதன்மையாகப் பேசவேண்டும். அவர்களோ துறந்தவர்கள், பெருமை, சிறுமைப் பற்றிய சிந்தனைகள் கூட இல்லாமால் முற்றுமாக நீத்தவர்கள். எவ்விதச் சார்புமின்றி சொன்னதினால், இது ஒரு சமூக அறநெறி சார்ந்த வாழ்வியலுக்கு உயர்ந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதாலேயே இக்குறளை வடித்துள்ளார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:
துறந்தவர் சீரொழுக்க மாட்சிமையை நன்னூல்
சிறப்பினுள் வைத்தொழு கும்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment