குறளின் குரல் – 37

May 16th, 2012
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
                                                  (குறள் 26: நீத்தார் பெருமை அதிகாரம்)
Transliteration:
seyaRkkariya seivAr periyar – siriyar
seyaRkkariya seigalA dhAr
seyaRkkariya – things that are difficult (if not impossible) to do
seivAr – can and will do.
periyar  – the people that are wise and great
siriyar – people that are otherwise ( I am surprised at this very simple categorization of two kinds)
seyaRkkariya – same as above, the things that are difficult to do
seigalAdhAr – Can not do!
The black or white delineation in this verse that those who do what is hard to do are noble and others are ignoble is hard to comprehend and accept by most people.
It is like this: If we say that those who render justice are the ones who are just and the rest are unjust.  Regardless of how it is interpreted, it blames the entire society at large and put them down.
Renunciation is not for the whole society and it should not be so too. If that’s how we interpret what vaLLuvar has said, it is gross misunderstanding. If it were true, he would not written extensively on the topics of society and family life etc.
Most commentators have had considerable difficulty in explaining this verse and have just have repeated what vaLLuvar has said in different words or even the same word.  There is no real intellectual discussion on this kuraL.
A cursory observation reveal this topic has construed to be talking about the people that have renounced, which itself may be wrong and later classification. The phrases such as conqueror of five senses ( “ஐம்புலனடக்கம் கொண்டார்” ) , those who tread the virtuous path ( “அறம் பூண்டார்” ),  those who do the difficult to practice things in life, (“ செயற்கரிய செய்வார்”), those whose words are full of wisdom (“நிறைமொழி மாந்தர்”) all point to people of highest erudition as well as impeccable conduct in any society.  So, while asking people to follow the model behavior of such people, it is common to say only such virtouous people can be considered people of nobility ; others are not really that noble.
So, it may be simply that this chapter talks about the people that have removed the bad aspects of human living and have strived hard to elevate and be noble in the society.
“Deeds hard to do are easy for the noble
  Even easy can be hard do for the ignoble”
செயற்கரிய – எல்லோராலும் எளிதில் செய்யமுடியாத (தானம், தவம், நியமம், வெகுளாமை, அன்புடமை, அருளுடமை போன்ற அறம்சார்ந்த குணநல கருமங்கள்)
செய்வார் – செய்கின்றவர்கள்
பெரியர் – பெரியோர், உயர்ந்தோர், மேலோர், தவத்தோர் எனலாம்
சிறியர் – கீழானோர், தாழ்ந்தோர், குணநலன்கள் குன்றியவர்கள்
செயற்கரிய – அவ்வாறு எளிதில் செய்யமுடியாதவற்றை
செய்கலாதார் – செய்வதற்கு இயலாதவர்கள்
இந்த குறளில் இருக்கிற இருநிலைப் பாகுபாடு பலராலும் ஏற்றுக்கொள்ளவியலாதது. கருப்பு, வெள்ளை என்பதைப்போல, பெரியோர், சிறியோர் என்ற பாகுபாட்டின்படி எல்லோராலும் செய்யவியலாத அருஞ்செயல்களைச் செய்பவர்தான் பெரியோர், மற்றோரெல்லாம் சிறியர் என்பது ஒப்புக்கொள்ளவியலாத ஒன்று. 
இது எப்படி எனில், நீதி வழங்குபவர்களே நீதிமான்கள், மற்றவர்களெல்லாம் அநீதிமான்கள் என்பது போலுள்ளது. மற்றவர்களெல்லாம் நீதிமான்கள் இல்லை என்று கூறியிருந்தாலாவது, ஒரளவுக்கு உண்மையிருக்கும். அதுவே கூட தவறான கூற்றே!  இத்தகைய பாகுபாட்டிலே எவ்விதச் சிறப்புமில்லை.
நீத்தல் என்பது சமூகத்தில் எல்லோராலும் முடியாத ஒன்று, கூடாத ஒன்றும் கூட. அப்படியிருந்தால் வள்ளுவரேகூட இல்லறவியலைப் பற்றியும், சமூகவியலைப்பற்றியும் எழுதியிருக்கமாட்டார். துறந்தார் செய்பவையெல்லாம் அரியன, அவர்களே பெரியவர்கள், மற்றவரெல்லாம் அரிய செயல்கள் செய்யமுடியாதவர்கள், அதனால் சிறியவர்கள், கீழோர்கள் என்பது யாருமே ஏற்றுக்கொள்ளவியலாத கூற்று.
இதற்கு உரை எழுதியதில் பல உரையாசிரியர்களின் தடுமாற்றம் நன்றாக த் தெரிகிறது. ஏதோ மேலோட்டமான பொருளைத்தான் தருகிறார்களே தவிர, அறிவார்ந்த உரையைக்காண முடியவில்லை.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் துறந்தவர்கள் என்று நேரடிப்பொருளில் சொல்லப்பட்ட குறள்கள் குறைவு. ஐம்புலனடக்கம் கொண்டார், அறம் பூண்டார், செயற்கரிய செய்வார், நிறைமொழி மாந்தர் என்றெல்லாம் வருவது, அறமல்லாத குணநலன்களை நீத்த எல்லோருக்குமே பொருந்துமாதலால், இந்த குறள் அத்தகைய நிலைப்பாட்டிலே சமூகத்தினர் எல்லோருக்கும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உயரிகுணநலன்களுக்கு உண்டான அறங்களை கடைபிடிக்கும் அரியவற்றை செய்பவர்களே பெரியவர்கள், மற்றோரெல்லாம் சிறியவர்கள் என்பதை ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளலாம். இதுவே சமூகத்தின் ஒட்டுமொத்த அறநிலைப்பாட்டுக்கு ஒரு ஊக்கி எனலாம்.
இன்றெனது குறள்(கள்):
அருஞ்செயல்கள் செய்பவர் நீத்தார்- சிறியோர்க்
கருஞ்செயல்கள் செய்தலரி தே
இக்குறளை எழுதிய பின்னர், இதை நீத்தார்க்கு என்று கூறுவதை விட, மேலோர், கீழோர் என்ற பாகுபாட்டில் கூறுவதுதான் முறையெனத் தோன்றியதால், சிறிது மாற்றி எழுதினேன்.

அருஞ்செயல்கள் மேலோர்க் கெளியது– கீழோர்க்
கருஞ்செயல்கள் செய்வதரி தே

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment