குறளின் குரல் – 41

May 20th, 2012

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
                                                  (குறள் 30: நீத்தார் பெருமை அதிகாரம்)
Transliteration:
andhaNar enbOr aRavOr matRevvuyirkkum
senthaNamai pUnDozhugalAn
andhaNar enbOr  – Those who can be called a Brahmins are
aRavOr  – people of virtuous path and truly realized soul (Brahma gnjAni – பிரமத்தை அறிந்த ஞானி)
matRu evvuyirkkum – Other than that (they are so known) because for all the other lives
senthaNamai  – Even temperament – not showing extreme temperatures..(akin to pleasant climate, cool in modern lingo))
pUnDozhugalAn – having the resolve to be so and be so
Who is a Brahmin? One who reaches the state of Godhead that does not have the preferences of likes and dislikes, is the one who can be called so.Since vaLLuvar declares that all lives are equal by birth and underlines the merits to be called a Brahmin, he states with authority and clarity that nobody is a Brahmin a by birth, but becomes one, by their virtuous conduct.
Our good deeds of one birth and their causal effects continue through our births to give us birth in good families; but our journey towards, seeking the greater truth and virtuous conduct is the only one which will accord the state of Brahminhood.
“Andhanan” (Brahmin) is one who stands by the virtuous ways, without the likes and dislikes of any kind, and compassionate, cool tempered towards all souls on this earth. Temperamentally they don’t have any extreme emotional attitudes for any reason and are equanimous towards everyone. The word “Andhanan” only points to such great souls. We may recall that the Godhead is also addressed as “aRavAzhi andhaNan” earlier in the first chapter only because of that.
“Brahmin is one, not by birth but virtuous conduct
‘cause of equal temperament to all not just  a sect”
அந்தணர் என்போர் – பிராமணர் என்பவர் யாரெனில்
அறவோர்  – தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்)
மற்றெவ்வுயிர்க்கும் – தவிரவும், உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும்
செந்தண்மை – சீரான தட்பத்தை உடைய, உணர்ச்சிகளின் எல்லைகளுக்குச் செல்லாத நோக்கும், போக்கும்  
பூண்டொழுகலான் – தங்களுடைய விரதமாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆதலால், அவர்கள் அந்தணர்கள்
தமிழிலே:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்களுள் முதன்மையாக விளங்குகின்றவர்கள் அதே போன்று விருப்பு வெறுப்பு இவை இல்லாமல், அல்லது அந்நிலையை அடைந்த, பிரமம் எனப்படும் பேருண்மை அறிந்தவர்கள். அவர்களே அந்தணர்கள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றதாலும், அந்தணன் என்பவருக்கு உண்டான தகுதி என்ன என்று வரையறுத்துச் சொல்வதாலும், பிறப்பால் எவரும் அந்தணராவதில்லை, குணத்தால், பேணுகின்ற அறத்தால் மட்டுமே ஆகிறார்கள் என்ற கருத்தை மிகவும் நயமாகச் சொல்லிவிடுகிறார் வள்ளுவர். நாம் ஒருபிறப்பில் செய்யும் நற்கருமங்களே, பின் வரும் பிறவிகளில், நமக்கு நல்ல குலத்தைத் தரும் என்பது உண்மையென்றாலும், நமது அறிவை, அறத்தை நோக்கிய பயணமே நம்மை அந்தணர் என்கிற நிலைக்கு உயர்த்தும்.
அந்தணர் எனப்படுப்பவர்கள், தரும வழிகளின் படி வாழ்ந்து, வேற்றுமையில்லா மனத்தினராகி, விருப்பு வெறுப்புகளைக் கடந்த ஞான நிலை நின்று வாழ்பவர்மட்டுமல்லாமல், எல்லா உயிர்களிடமும் சீரான, ஒரே தன்மையதான தட்பத்தைப் போன்ற நிலைப்பாடு கொண்டவர்கள்.
அந்தணன் என்றது எதனால்? பிரமஞானத்தைப் பெற்றவர்கள், பிறப்பை, உடலை, உள்ளத்தை, மற்றும் உலகைச் சார்ந்த விருப்பு வெறுப்புகள் அற்று, தூய அறிவுச் சுடரான பரம்பொருளை அறிந்தவர்கள். அவர்களை எவ்வித உணர்ச்சி எல்லைகளுக்கும்  செல்லாத சீரான தட்பத்தை கொண்டவர்கள் என்பதால்.  அந்தணன், பார்ப்பார், பிராமணர் என்ற சொற்கள் எல்லாம் அந்நிலையினை அடைந்தவர்களுக்கே! அந்த இறைப்பொருளையும், “அறவாழி அந்தணன்” என்றது அதனாலேதான்! 
இன்றெனது குறள்:
தண்ணருளை தன்னறமாய் மன்னுயிர்கள் வாழ்தருமின்
வண்ணத்தார் அந்தணரென் பார்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment