குறளின் குரல் – 308

14thFebruary, 2013
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
                       (குறள் 299:  வாய்மை அதிகாரம்)
Transliteration:
ellA viLakkum viLakkalla chAndROrkkup
poyyA viLakkE viLakku
ellA viLakkumThe physical sources that give external light like fire, sun or subtle and invisible forms of light of knowledge, education
viLakkalla – are not truly illuminating
chAndROrkkup – knowledgeable and scholarly (ascetcis)
poyyA viLakkE – the light devoid of falsity (truthfulness)
viLakku – true illuminating source of light
All external sources of light that quell physical darkness such as sun or fire, and the darkness of ignorance such as the knowledge gained and geared towards worldly life are not true lamps of illumination. For people in the pursuit of higher knowledge, being ascetics, the true knowledge of truthfuleness is the real lamp of illumination.
Since vaLLuvar has said, “all lamps” he has made it all inclusive to external lighting sources as well as the light of knowlege to live a wealthy life of comfort . The soul illuminating lamp is in not having falsity or stead a life of truthfulness, which is not external or physical in nature. Whatever knowledge that keeps a person, especially penitents in absolute truthfulness is truly the source of illumination.
None other than the lamp of truthfulness
 Can truly be a lamp that is so illuminous”
தமிழிலே:
எல்லா விளக்கும் – புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன் போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும்
விளக்கல்ல – இவற்றையெல்லாம் வெளிச்சத்தை தரும் விளக்கென்று ஆகா?
சான்றோர்க்குப் – அறிவில் சிறந்த ஞானியருக்கு
பொய்யா விளக்கே – வாய்மையென்னும் பொய்யாமையாகிய மெய்யொளியே
விளக்கு – ஒளியைத் தரும் விளக்கு.
புற இருட்டினைப் போக்கக்கூடிய சூரியனும் தீயும்,  அறியாமை இருட்டை நீக்கக்கூடிய கல்வியும் உண்மையிலே விளக்கங்களாகக் கருதப்படமாட்டா. அறிவில் சிறந்த ஞானியர்க்கும், துறவற நிலையில் இருப்பவர்க்கும், பொய்யாமையென்னும் உறுதியிலே இருப்பதே அதாவது வாய்மையென்னும் ஒளியைத் தரும் அகவொளி விளக்கே உண்மையான விளக்காகும்.
எல்லா விளக்கும் என்று சொன்னதால், புற வெளிச்சத்தைத்தரும் இயற்கையாயும், செயற்கையாயும் உள்ள பௌதீக ஒளிமூலங்களை குறிப்பதாகக் கொள்ளுவர். இது, வாழ்க்கை நடத்துதற்கும், வசதிகளுக்காகவும் தேவையான கல்வியறிவும் புறவொளிதரும் வகையின. அகவொளியைத் தருவதும் ஞானத்தைத் தருவதுமான மெய்யறிவு எதுவோ, எவ்வறிவு ஒருவரை எக்காரணம் கொண்டும் பொய்யாமை என்னும் வாய்மை நிலையில் நிறுத்துமோ, அதுவே உண்மையான வெளிச்சத்தைத் தரும் ஒளிவிளக்காம்.
நான்மணிக்கடிகை  இரண்டுபாடல்களில் பொய்யைப்பற்றி பாடுகிறது. “ஒருவனைப் பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை” என்றும், “புகழ்செய்யும் பொய்யா விளக்கு”  என்றும் சொல்வதில் பொய் ஒருவரது உருவை அழிக்கும் என்றும் பொய்யாமையோ புகழைத்தரும் என்றும்  கூறுகிறார். சுந்தரரும் தம் தேவாரத்தில், “ பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்” என்பார்.
இன்றைய குறள்:
புறவிருள் போக்கும் விளக்கினும் வாய்மை
அறச்சான்றோர் போற்றும் விளக்கு
puRaviruL pOkkum viLakkinum vAymai
aRacchAnROr pORRum viLakku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment