குறளின் குரல் – 336

14th March 2013
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
                       (குறள் 327: கொல்லாமை அதிகாரம்)
Transliteration:
Thannuyir nIppinum seyyaRka thAnpiRidhu
Innuyir nIkkum vinai
Thannuyir – life of self
nIppinum – even if have to readily sacrifice
seyyaRka – donot do
thAnpiRidhu – other lifeforms (by self)
Innuyir – their life
nIkkum – removing (by killing)
vinai – deeds.
The word “piRidhu” in this verse clearly refers to live forms devoid of sixth sense, and inferior to humans. Even at the cost losing of life, one should not kill other lives for self-sustenance. Since, killing other lives amounts to sinning, one must desist that.
Though this verse has been said as an epitome of the virtue of not killing, is it realistically possible, even for the renounced ones to not kill, facing the danger being killed? Or even when there is extreme hunger? VaLLuvar has already said in the verse 259, (refusing meat) that instead of doing thousands of fire sacrifices, not killing another life for eating and self-preservation is better, which we may want to recall here. (avi sorindhAyiram vETTalin onRan uyir seguththuNNAmai nanRu). The same thought is said in the context of “not killing” here.
“Even at the cost losing life of self, renounced must
 Desist the deed of killing another for virtue to persist”
தமிழிலே:
தன்னுயிர் – தன்னுடைய உயிரையே
நீப்பினும் – நீங்கவேண்டியிருந்தாலும்
செய்யற்க – ஒருவர் செய்யக்கூடாது
தான்பிறிது – தானாக பிற உயிரினங்களின்
இன்னுயிர் – அவற்றுக்கும் இனிமையாகவே விளங்கும் உயிரினை
நீக்கும் – நீக்கக்கூடிய (கொல்வதன்மூலம்)
வினை – செயல்களை.
பிறிதின் இன்னுயிர் என்றதால் அஃறிணை உயிர்களைக்குறித்தே சொல்லியிருப்பது தெளிகிறது. ஒருவன் தன்னுயிர் நீங்ககூடிய நிலையிலும் தன்னைத் தாக்கவரும் மற்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்று இக்குறள் அறிவுறுத்துவதாகத் தெரிகிறது. பிறவுயிர்களைக் கொல்லுதலால் பாவம் வருமாதலால், அது தன்னுயிர்க்கே தீம்பாயினும் விலக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது.
இது கொல்லாமையின் உச்சமாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் நடக்ககூடியதா, துறவிகளாகவே இருந்தாலும்? தனக்கு உணவு இல்லை என்றாலும், அதனால் பசியில் வருந்தி உயிரிழக்க நேரிடினும் மற்றொரு உயிரினைக் கொல்லாமை என்பது வேண்டுமானால் துறவிகளால் இயன்றதாகக் கொள்ளலாம். இதே கருத்தை புலால் மறுத்தல் அதிகாரத்தில் (குறள் எண் 259) அவி சொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று” என்று வள்ளுவரே சொல்லியிருப்பதை நினைவு கூறவேண்டும்.
இன்றெனது குறள்:
பிறவுயிர் போக்கிடும் பாழ்வினை போற்றீர்
இறப்பினும் இன்னுயிர் ஈந்து
piRavuyir pOkkiDum pAzvinai pORRIr
iRappinum innuyir Indhu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment