குறளின் குரல் – 352

30th March 2013
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
                         (குறள் 343: துறவுஅதிகாரம்)
Transliteration:
aDalveNDum aindhan pulaththai viDalvEnDum
vENdiya vellAm orungu
aDal veNDum – must quell
aindhan pulaththai – the desires of all five senses
viDalvEnDum – must quit the attachment
vENdiyavellAm  – in all these things that have been created for enjoyment
orungu – all at once
Without saying why and for what, vaLLuvar says that one must quell the desires of five senses and also must relinquish what would be nice to have in life to relish, all at once. It is not even clear as to whom it is addressed to. Since it is under the chapte of Renunciation, we must surmise that this is meant for people of ascetic pursuit. In Parimelazhagar’s commentary, he says, “forthose who attain heavenly abode”; thought cannot be refuted, it is possible that he has got the hint from a verse in “nAlaDiyAr”.
In this verse perhaps the word “aDal” could mean strength out of penance! For someone to get the strength out of penance they have to quell and leave the desires born out of the five senses, that too all at once.. The word vEnDum must have been vEnDin.. Perhaps the mistake crept while copying form only palm-leaf to another.
“Must quell the desires of five senses and relinquish
 All at once what would be nice having in life to relish”
“must quell the desires of five senses all at once,
  Should one desire the strength out of penance!”
தமிழிலே:
அடல் வேண்டும் – கொன்றொழிக்க வேண்டும்
ஐந்தன் புலத்தை – ஐந்து புலன்களால் எழும் ஆசைகளை
விடல்வேண்டும் – பற்றினை விட்டுவிட வேண்டும்
வேண்டியவெல்லாம் – நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்திலும்
ஒருங்கு – ஒன்றாக, ஒரே நேரத்தில்
எதற்கு என்று சொல்லாமல், இக்குறள் ஐம்புலன்களால் விளையும் ஆசைகளைக் கொன்று ஒழிக்கவேண்டும் என்றும், நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்தும் வேண்டுவனவாயிருப்பினும் அவற்றின் மீது பற்றினையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். இது துறவு நெறி மேல் செல்பவர்களுக்காகவே கூறப்பட்டதாகக் கருதவேண்டும். பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு”என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.
இக்குறளில் அடல்வேண்டும் என்பது அடல் வேண்டின் என்று இருந்திருக்கலாம். அப்போது புலனைந்தும் அடங்கினால் கிடைப்பது வலிமை என்னும் பொருள் கிடைக்கும். தவவலிமைப் பெறுவதற்கு புலனைந்தும் அடங்குதல் வேண்டுமன்றோ?
இன்றெனது குறள்:
கட்டுறுத்தி ஐம்புலத்து ஆசைகளை, வேண்டியவும்
விட்டொழித்துச் செய்தல் துறவு
தவவலிமைக் கூடுமே ஐம்புலனா சைகள்
உவக்கா தொருங்கொழித் தார்க்கு
kaTTuRuththi eyembulaththu AsaigaLai, vENDiyavum
viTTOzhiththuch seydhal thuRavu.
tava valimaik kUDumE aimpulanA saigaL
uvakkA thorungkozhit tArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

3 Responses to குறளின் குரல் – 352

  1. Rajesh says:

    அன்புள்ள அஷோக், நலமா?
    அடல் – வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை
    இதுவே agarathi.com சொல்கிறது. எனக்கு இக்குறளுக்கு தோன்றும் பொருள் என்னவென்றால், வலிமை வேண்டும் என்றால், ஐந்து புலன்களை அடக்க வேண்டும், ஆசைகளையும் விட ஒருசேர விட வேண்டும்.
    ஆதலால், ”எதற்கு என்று சொல்லாமல்” என்பதற்கு பதில் வலிமை என்றே நான் நினைக்கிறேன். விருப்பம் இருப்பின் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
    அன்புடன்
    ராஜேஷ்

  2. ashoksubra says:

    நீங்கள் சொல்வதில் பொருள் இருக்கிறது.. தவ வலிமை வேண்டின் (தவத்தினால் பெறக்கூடிய வலிமை) வேண்டுமாயின் புலன்களின் அவாவறுக்க வேண்டும் என்பதே பொருளாக இருக்கும். அப்போது “அடல் வேண்டின்” என்றே இருந்திருக்கவேண்டும்.. படிமம் எடுக்கையில் அடல்வேண்டும் என்று எடுத்திருப்பார்கள்!..

Leave a comment