குறளின் குரல் – 377

24th April 2013
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.
                            (குறள் 369: அவாவறுத்தல் அதிகாரம்)
Transliteration:
Inbam iDaiyaRA dhInDum avAvennum
thunbaththuL thunbang keDin
Inbam – eartly pleasures apart from eventual heavenly abode
iDaiyaRA(dhu) – continuosuly
InDum – will be attained
avAvennum – if the desires
thunbaththuL thunbang – thare most miserable among miseries,
keDin – are severed.
Apart from the eventual place in heavenly abode, unceasing happiness in this world will be there! When? For who? When somebody loses the desires, the most miserable of miseries!  Parimelazhagar says the miserable of miseries is something which will make other miseries feel even like happiness and such is the intensity of misery that  befalls because of desires.
Parimelazhagar also interprets the “incessant happiness” as going to heavens with the human body as it is mentioned for Kannagi in silappadikAram. The expression “thunabaththuL thunbam” is common way of expressing even in everyday usage, AraneRichAram, says such misery will be there for people who do not know how to pursue ascetic life and attain happiness there (“thunabaththuL thunbam uzhappar thurandheidhum inbathilyal aRiyAdhavar”).
“Joyfulness incessantly in life will be accomplished
 If desire, the most miserable of miseres, detached”
தமிழிலே:
இன்பம் – இன்பமாகிய முத்தி மட்டுமின்றி உலகியல் இன்பங்களும்
இடையறாது – தொடர்ந்து
ஈண்டும் – கூடும்
அவாவென்னும்
 – ஆசையென்னும்
துன்பத்துள் துன்பங் – மற்ற துன்பங்களை இன்பமாகக் காட்டக்கூடிய துன்பம்
கெடின் – தொலையுமானால்
ஒருவர்க்கு பிறப்புக்குப்பின் வரும் முத்தியைத் தவிர இவ்வுலக இன்பங்களும் இடையறமால் வரும்! எப்போது? ஆசையென்னும் துன்பங்களிலெல்லாம் கொடுந்துன்பமானது தொலையும்போது. இதுவே இக்குறள் சொல்லுவது. துன்பங்களுக்குள் துன்பம் என்பதை, மற்றதுன்பங்களை இன்பமாக உணரச்செய்யக்கூடிய அளவுக்கு கொடிய துன்பம் என்பார் பரிமேலழகர்.
துன்பத்துள் துன்பம் என்பதை அறநெறிச்சாரப் பாடலொன்றும் இவ்வாறூ சொல்கிறது.
“துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் இன்பத்தியல்பறியாதவர்”. பரிமேலழகர் அவா அறுத்தார் வீட்டின்பம் (முத்தி) தம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பார்.
இன்றெனது குறள்:
வேண்டலெனும் துன்பம் தொலைந்திட இன்பமே
மீண்டும் இடையறா மல்
vEnDalenum thunbam tholaindhiDa inbamE
mINDum iDaiyaRA mal

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment